AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆந்திராவில் இருந்து பைக்கில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா.. ஆவடியில் பொறி வைத்து பிடித்த போலீசார்..

அந்த கஞ்சாவை ஆவடியில் உள்ள தயாளனின் அக்கா ஈஸ்வரியின் வீட்டில், டூ-வீலர் உதிரிப்பாகங்கள் என கூறி பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து பைக்கில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா.. ஆவடியில் பொறி வைத்து பிடித்த போலீசார்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 May 2026 13:11 PM IST

சென்னை, மே 16, 2026: தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசு, போதைப் பொருள் தடுப்பிற்காக தனிப்படை அமைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆவடி காவல் மாவட்டத்தில் துணை ஆணையர் ஃபெரோஸ் கான் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆவடி மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

3 பேரை கைது செய்த போலீசார்:

இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அயப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை உறுதி செய்த போலீசார், கஞ்சா வாங்க வருபவர்கள் போல நடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அஞ்சுகம் நகரைச் சேர்ந்த தயாளன் (21), உதய பிரசாந்த் (21), கோபாலகிருஷ்ணன் (21) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..

100 கிலோ கஞ்சா வாங்கி வந்தது அம்பலம்:

விசாரணையில், தயாளன் டூ-வீலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 5ஆம் தேதி தயாளன் மற்றும் உதய பிரசாந்த் ஆகியோர் பைக் ரேசர் போல உடை அணிந்து கொண்டு, ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மலைப்பகுதிக்கு சென்று ரூ.3 லட்சம் கொடுத்து 100 கிலோ கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

மேலும் படிக்க: வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!

கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர்:

அந்த கஞ்சாவை ஆவடியில் உள்ள தயாளனின் அக்கா ஈஸ்வரியின் வீட்டில், டூ-வீலர் உதிரிப்பாகங்கள் என கூறி பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், தயாளன் மற்றும் அவரது கூட்டாளிகள் அடிக்கடி பைக் ரேஸ் மற்றும் மலைப்பகுதி டிரெக்கிங் செல்வது போல நடித்து, பைக் ரைடர் குழுக்களுடன் இணைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow Us