தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.. மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்!
TVK Madurai Conference : 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டு, அதற்கு காவல்துறை தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்காக தவெக சார்பில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 12 : மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) மாநாட்டிற்கு (TVK Madurai Conference) காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், தற்போது மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலளார் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார். 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து விஜய், கட்சி தொடங்கினார். இன்னும் சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ளதால், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், கட்சியின் இரண்டரை கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் இலக்கு நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழககத்தின்ல இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் மாநாடு நடைபெற உள்ளது.
தவெக மாநாட்டிற்கு அனுமதி
இந்த மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடத்த அக்கட்சி பொதுச் செயலளார் ஆனந்த் காவல்துறை அனுமதி கேட்டிருந்தார். காவல்துறையினரிடம் உணவு, குடிநீர், கழிவறை, போக்குவரத்து, வாகன நிறுத்தும் இடம், சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் குறித்து காவல்துறையினர் தவெகவிடம் 42 கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதற்கான பதில்களையும் தவெக சாரர்பில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.




Also Read : பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? பி.எல். சந்தோஷ் சொன்ன விஷயம்.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்!
இதனை அடுத்து, காவல்துறை தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், “2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெக மாநாடு மதுரையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. திட்டமிட்டப்படி, 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும்” என கூறினார்.
தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் குழந்தைகள் கர்ப்பிணிகள் வயதானவர்களுக்கு அனுமதி கிடையாது. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் பாஸ் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விஜய் மேடைக்கு வந்தும் தொண்டர்களை பார்த்து நடந்துச் சென்று அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில், இதற்காக 200 மீட்டர் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
Also Read : மை டி.வி.கே செயலி.. 20,000 வாக்குச்சாவடி முகவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி..
மாநாட்டில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. 200 ஏக்கரில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.