2 கோடி டார்கெட்.. உறுப்பினர் சேர்க்கையை வேகபடுத்தும் விஜய்.. நாளை செயலி அறிமுகம்!
TVK District Secretaries Meeting : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2025 ஜூலை 30ஆம் தேதியான நாளை மாவட்ட செயலாளர்கள கூட்டம் நடைபெற உள்ளது. பனையூரில் நடக்கும் இந்த கூட்டத்தில் மதுரை மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதோடு, தவெக உறுப்பினர் செயலியை விஜய் அறிமுகப்படுத்த உள்ளார்.

சென்னை, ஜூலை 29 : தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) உறுப்பினர் சேர்க்கை செயலியை 2025 ஜூலை 30ஆம் தேதியான நாளை அக்கட்சி தலைவர் விஜய் (TVK C hief Vijay) வெளியிடுகிறார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை விஜய் வெளியிடுகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (2026 Tamil Nadu Assembly Polls) இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், களத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிகிறது.
இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, புதிதாக அரசியல் களத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த முயற்சித்து வருகிறது. அதோடு, இன்னும் ஒருசில மாதத்தில் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உறுப்பினர் சேர்க்கையும் தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.
Also Read : இன்று சேலத்தில் நடக்கும் த.வெ.கவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.. திட்டம் என்ன?




தவெக உறுப்பினர் செயலி நாளை அறிமுகம்
இதன் மூலம், தவெக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் தான், தவெக தலைவர் விஜய் உறுப்பினர் செயலியை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த செயலில் 2025 ஜூலை 18ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் செயலி அறிமுகப்படுத்தப்பட இருந்தது.
ஆனால், சில காரணங்களால் அப்போது அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் 2025 ஜூலை 30ஆம் தேதியான நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக உறுப்பினர் செயலியை விஜய் அறிமுகப்படுத்த உள்ளார். இதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தி இருக்கிறது.
Also Read : அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திட்டவட்டமாக மறுத்த தவெக.. பின்னணி என்ன?
இதுவரை கட்சியில் ஒரு கோடி பேர் இணைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், 2025 ஜூலை 30ஆம் தேதியான நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மதுரை மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மதுரை மாநாடுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெக இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், தவெகவின் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.