AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு.. சிக்கலில் தவிக்கும் தவெக!!

கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாத காலமாக அரசியல் செயல்பாட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் முற்றிலும் முடங்கியிருந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை சென்னை அழைத்து வந்து ஆறுதல் தெரிவித்த பின், மீண்டும் தனது அரசியல் செயல்பாட்டில் வேகம் காட்டி வருகிறார்.

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு.. சிக்கலில் தவிக்கும் தவெக!!
விஜய் ரோடு ஷோ
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Nov 2025 13:47 PM IST

புதுச்சேரி, நவம்பர் 29: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் டிச.5ம் தேதி அவர் அம்மாநிலத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு, டிஜிபி அலுவலக்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது போன்ற அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதி, போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ரோடு ஷோ மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அதுவரை பொது இடங்களுக்கு வராமல் இருக்க முடியாது என்பதற்கா, புதுச்சேரியில் சென்று ரோடு ஷோ நடத்த தவெக தரப்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளையும் அக்கட்சியினர் விறுவிறுப்பாக மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

இதையும் படிக்க : “பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்”.. அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறை:

கரூரில் கடந்த செப்​.27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலி்ல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து அரசியல் கட்சிகளின் ரோடுஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தவெக, அதிமுக கட்சிகள் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஒருமித்தமாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசு சார்பில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ரோடு ஷோவுக்கு நீடிக்கும் தடை, நெருங்கும் தேர்தல்:

இந்த தீர்ப்பு வெளியாகும் வரை தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சிகளும் ரோடு ஷோ நடத்த முடியாது. இந்நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். இதனால், தற்போதே அரசியல் கட்சிகள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன.  அந்தவகையில், கரூர் சம்பவத்தை தொடர்ந்து  நீண்ட நாட்களாக முடங்கியிருந்த தவெக  டிச.4 முதல் மீண்டும் சுற்றுப்பயணத்ததை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்த விஜய்:

இதற்காக சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால், கார்த்திகை தீபம், பாபர் மசூதி இடிப்பு தினம் போன்ற காரணங்களை கூறி, பாதுகாப்பு வழங்குவது சிரமம் என்பதால் வேறு தேதிக்கு பிரச்சார தினத்தை மாற்றும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து, தவெக தலைவர் விஜய் கடந்த நவ.23ம் தேதி காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மக்களை சந்தித்தார். இதில், சிக்கல் என்னவென்றால், 2000 பேரை மட்டுமே அவரால் ஒரு இடத்தில் சந்திக்க  முடிகிறது. 

இதையும் படிக்க : இருட்டைக் கண்டு அஞ்ச வேண்டாம்; “சூரிய உதயம் வரும்; உதயநிதியும் வருவார்”.. கமல்ஹாசன் பேச்சு!!

புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டம்:

இதுவே, ஒரு மாவட்டத்திற்கு ரோடு ஷோ சென்றால், ஒரேநாளில் 30,000 முதல் 40,000 பேரை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளலாம். இதனால், தமிழகத்தில் அனுமதி கிடைப்பதற்குள் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தலாம் என திட்டமிட்ட தவெக அதற்கான பணிகளில் இறங்கியது. இந்நிலையில், வரும் டிச.5ம் தேதி அவர் அம்மாநிலத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு, டிஜிபி அலுவலக்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

எனினும், அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தொடர்ந்து, அனுமதி மறுக்கப்பட்டதும் தவெக பொதுச்செயலாளர் டிஜிபி அலுவலகம் விரைந்துள்ளார். எனினும், அங்கு டிஜிபி ஊரில் இல்லை என்று அலுவலக கூறியதால், ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இதனால், அடுத்தடுத்து தவெக தரப்பு சிக்கலில் தவித்து வருகிறது.

Follow Us