AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அமைச்சரவையில் பங்கேற்பது விசிகவின் தனிப்பட்ட உரிமை”.. கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிரடி!!

Communist about cabinet expansion: மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்கவும், மற்றொரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தச் சரியான அரசியல் முடிவை எடுத்தோம். இந்த ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை" என்றனர்.

“அமைச்சரவையில் பங்கேற்பது விசிகவின் தனிப்பட்ட உரிமை”.. கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிரடி!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 May 2026 14:15 PM IST

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான இடங்களில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிகள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறோம். இந்த விலையேற்றத்திற்கு முழுக்க முழுக்க மத்திய பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று சாடினார்.

இதையும் படிக்க: ‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியும், இன்ஸ்டாகிராம் அட்வைஸும்’.. கனிமொழி எம்.பி கொடுத்த பகுத்தறிவு டோஸ்!

ஏழை எளிய மக்கள் எப்படி வாழ முடியும்?

மேலும் அவர் பேசுகையில், “தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை பிஜேபி அரசு உயர்த்தும் என்று நாங்கள் எச்சரித்தபோது, அதையெல்லாம் மறுத்து ‘அது வெறும் வதந்தி, எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம்’ என்று மத்திய அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர். ஆனால், தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே வணிக சிலிண்டர் விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை ₹3 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் நான்கு நாட்கள் கழித்து ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி நான்கு நாட்களுக்கு ஒருமுறை விலையை உயர்த்திக்கொண்டே போனால் சாதாரண ஏழை எளிய மக்கள் எப்படி வாழ முடியும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் மிகக் கடுமையாக உயர்த்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.

அமைச்சரவையில் பங்கு இல்லை:

தொடர்ந்து, தமிழக அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும், தற்போதைய அரசியல் திருப்பங்கள் குறித்தும் சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே கூட்டு நிலைப்பாட்டை எடுத்துதான் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துள்ளோம். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்கவும், மற்றொரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தச் சரியான அரசியல் முடிவை எடுத்தோம். இந்த ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை” என்றனர்.

இதையும் படிக்க: தவெக அமைச்சரவையில் பங்கேற்குமா விசிக?.. திருமாவளவன் சொல்வது என்ன?

விசிகவின் தனிப்பட்ட உரிமை:

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசிக-வை அமைச்சரவையில் இணையுமாறு விடுத்துள்ள அழைப்பு குறித்துப் பேசிய அவர், “அமைச்சரவையில் பங்கேற்பது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயம். ஒருவேளை அவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், அதில் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் எங்களை விட மாறுபட்ட முடிவை எடுக்கவும் உரிமை உண்டு. இருப்பினும், அவர்கள் எங்களோடு கலந்து பேசுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Follow Us