AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“வழக்கை வாபஸ் பெறு இல்லையேல்”.. துப்பாக்கி குண்டுகளுக்கு பின்னால் தொடரும் மிரட்டல்.. ஆலங்குளம் பனை தொழிலாளி பகீர் வீடியோ!

Alangulam Police Shooting Issue : ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது எஸ்ஐ இசக்கி ராஜா துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பனை தொழிலாளி அதிர்ச்சி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

“வழக்கை வாபஸ் பெறு இல்லையேல்”.. துப்பாக்கி குண்டுகளுக்கு பின்னால் தொடரும் மிரட்டல்.. ஆலங்குளம் பனை தொழிலாளி பகீர் வீடியோ!
பனை தொழிலாளி மணிகண்டன் வைரல் வீடியோ
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 30 Apr 2026 12:46 PM IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், கள் விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டதில் இரு கால்களில் கொண்டு பாய்ந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், மணிகண்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு மது, சிகரெட், பீடி, புகையிலை உள்ளிட்ட பழக்கங்கள் கிடையாது. இதுபோன்ற பழக்கங்களுக்கு நான் அடிமையாகவும் மாட்டேன். நான் தற்போது பனைத் தொழில் செய்து வருகிறேன். பதநீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் என்னை கள்ள இறக்குவதாக குற்றம் சாட்டி ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் அவருடன் வந்த போலீசார் என்னை பனை மரம் ஏறுமாறு கூறினர். அப்போது, பனை மரத்தில் கட்டப்பட்டிருந்த பானையை இறக்கி அவர்களிடம் காண்பித்தேன்.

எஸ்ஐ இசக்கி ராஜா தலையில் காயம்

அதில், பதநீர் மட்டுமே இருந்தது. அப்போது, கள் எங்கே எனக்கூறி எஸ் ஐ இசக்கி ராஜா என்னிடம் கேள்வி எழுப்பினார். அந்த நேரத்தில், எனது தந்தை மற்றும் எனது சகோதரரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் வந்தனர். அப்போது, என்னிடம் போலீசார் வாக்குவாதம் செய்ததை எனது சகோதரரின் மகள் வீடியோ எடுத்த போது அந்த போனை எஸ். ஐ. இசக்கி ராஜா தட்டிவிட்டார். மேலும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். அப்போது, எனது சகோதரர் மகனை அடிக்க பாய்ந்தார். இதனை நான் தடுக்க முயன்ற போது, இருவரும் கீழே விழுந்துவிட்டோம். அப்போது, இசக்கி ராஜாவுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!

துப்பாக்கியால் சுட்ட எஸ். ஐ. இசக்கி ராஜா

அந்த ஆத்திரத்தில், எனது காலில் துப்பாக்கியால் சுட்டார். அப்போது, எனது நெஞ்சில் காலை வைத்துக் கொண்டு எனது தந்தையிடம் நாங்கள் கூறுவதை அப்படியே சொல்லாவிட்டால் உனது மகன் மற்றும் பேரன், பேத்தியை இங்கேயே கொன்று போட்டு விடுவேன் என்று எஸ்ஐ இசக்கி ராஜா மிரட்டினார். இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் என்னிடம் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும். சமரசம் வரவில்லை எனில் நடப்பதே வேறு எனவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் போலீசாரா அல்லது எஸ் ஐ இசக்கி ராஜா ஆதரவாளரா என தெரியவில்லை.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக கூறி வற்புறுத்தல்

அத்துடன் நான் முழுமையாக குணமடையாத நிலையில், என்னை டிஸ்சார்ச் செய்யக்கோரி மருத்துவர் ஒருவர் வற்புறுத்தி வருகிறார். எனவே, இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. திடீரென மாற்றப்பட்ட நீதிபதி.. பின்னணியில் என்ன நடந்தது?

Follow Us