AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வலுப்பெறக்கூடும் என கணிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?

Tamil Nadu Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நாளான நவம்பர் 22, 2025 அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வலுப்பெறக்கூடும் என கணிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 19, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது அதன் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் வரும் நவம்பர் 22, 2025 அன்று வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 24, 2025 அன்று தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்குப் பிறகு 48 மணிநேரம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கணிக்கப்பட்டது போலவே புயலாக வலுவடையவும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் 14 சென்டிமீட்டர், தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பதிவாகி வருகிறது.

2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இந்த சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழமை சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 20 நவம்பர் 2025 அன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!

அதேபோல் 21 நவம்பர் 2025 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நாளான நவம்பர் 22, 2025 அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நவம்பர் 22 முதல் 25 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்த சூழலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் இடி–மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த திசையில் நகரும் என்பதைப் பொறுத்தே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை இருக்கும் வாய்ப்பை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us