திருவண்ணாமலை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? போலீஸ் திடீர் ட்விஸ்ட்.. களத்தில் இறங்கிய மகளிர் உரிமை ஆணையம்!
Tiruvannamalai Girl Gang Harassment Case : திருவண்ணாமலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தேசிய மகளிர் உரிமைகள் ஆணையம் விசாரணையில் இறங்கி உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில் பொய் தகவல்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனது பாட்டியின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அந்த சிறுமியை மிரட்டி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, அந்த சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்த சிறுமி வீட்டுக்கு சென்று தனது உறவினர்களிடம் இந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியிடம் போலீசார் விசாரணை
அங்கு, சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், உடல்நிலை மோசமாக இருப்பதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சந்தேகத்தின் பேரில், 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: முதல்முறை வாக்காளர்களே தயார் தானா? – வாக்குச் சாவடியில் நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?




தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக 5 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும், பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதுடன், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
சிறுமி கூறிய தகவலில் பொய் உள்ளது
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், திருவண்ணாமலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை. கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் சிறுமி மட்டும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததாகவும். இதில், சிறுமியின் நண்பர் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் ஒருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இதில், சிறுமியின் தகவல் அனைத்தும் பொய் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கள்ள ஓட்டு போடப்பட்டால் கவலை வேண்டாம்: மீண்டும் வாக்களிக்க சட்டத்தில் இடமுண்டு!