AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. பேருந்து தட்டுப்பாடு குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

Minister Sekar Babu Explanation: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து தட்டுப்பாடு குறித்த பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததாலும், முந்தைய ஆட்சியின் திட்டமிடல் குறைபாடுகளாலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு, பிரச்சினை தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. பேருந்து தட்டுப்பாடு குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - அமைச்சர் சேகர் பாபுImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jun 2025 15:57 PM IST

சென்னை, ஜூன் 8: சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் (Kilambakkam Bus Stand) கடந்த சில நாட்களாக பேருந்து தட்டுபாடு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் புகார்களை பதிவிட்டன. இதையடுத்து, ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் குவிந்ததால், கூடுதல் பேருந்தை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் (Tamilnadu Transport Corporation) தெரிவித்தது. கடந்த 4 நாட்களில் 2 முகூர்த்த நாட்கள் என்பதால், தென் மாவட்டங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துக்கு காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்து தட்டுபாடு ஏற்பட்டதாக கூறியது குறித்து அமைச்சர் சேகர்பாபு (Minister Sekar babu) விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு விளக்கம்:

இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “ஒரு ஆட்சிக்கு ஏதேனும் சாட்சிகள் வைக்க வேண்டும் என்றால், கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையமே சாட்சி. சரியான திட்டமிடல் இல்லாமல், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அவர்களால் முழுமையாக கட்டி முடிக்க முடியவில்லை. இந்த ஆட்சியில் மேற்கொண்ட திட்டங்களை பட்டியலிட்டால் காலமும், நேரமும் போதாது. அந்த கிளாம்பாக்கத்தில் தேங்குகின்ற மழை தண்ணீரை வெளியேற்ற, அவர்களது ஆட்சி காலத்தில் வடிகால் பாதைகள் கூட அமைக்கப்படவில்லை.

கிளாம்பாக்கத்திற்கும் ரயில் நிலையத்திற்கும் இணைப்பு ரயில்வே பாதைகள் கூட அமைக்கப்படவில்லை. அந்த கிளாம்பாக்கத்திற்கு வருகின்ற பயணிகள் வெளியேறுவதற்கு வழி மார்க்கங்கள் கூட அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைத்ததற்கு பிறகுதான் அனைத்து வசதிகளை செய்து கொடுத்தோம். இதன்பிறகு, ஸ்கை வாக் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்படி எந்த பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகுதான், கிளாம்பாக்கம் பேருந்து முழுமையாக முடிவடைந்தது. இப்போது சர்வதேச அளவில் பெயரை பெற்றுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்:

சமீபத்தில், தொடர் விடுமுறை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இரவு நேரத்தில் அதிகளவிலான பயணிகள் கூடியதால், பேருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்துகளை இயக்க சொல்லி உத்தரவிட்டு, அதற்கு தீர்வையும் கொண்டு வந்தார். முகூர்த்த நாட்கள், பக்ரீத், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் பயணிகள் அதிகளவில் கூடியபோதிலும், தேவையான பேருந்துகள் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 200, 300 பேர் இரவு நேரங்களில் கூடியதால், பேருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையும், 1 மணிநேரத்திற்குள் சரி செய்யப்பட்டது. கிளாம்பாக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்” என்று தெரிவித்தார்.

Follow Us