Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Amit Shah : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Minister Amit Shah Visited Madurai Meenakshi Amman Temple | உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இன்று (ஜூன் 08, 2025) மாலை நடைபெற உள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ள அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

Amit Shah : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!
சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2025 07:57 AM

மதுரை, ஜூன் 08 : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா (Home Minister Amit Shah) சுவாமி தரிசனம் செய்தார். மதுரையில் இன்று (ஜூன் 08, 2025) நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூன் 07, 2025) இரவு அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்தார். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக மதுரை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் இன்று (ஜூன் 08, 2025)  மாலை பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூன் 07, 2025) இரவு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அமித்ஷா பாஜக நிர்வாகிகள் சிலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷா

கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய விவகாரம் குறித்து ஆலோசித்த அமித்ஷா

தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் உடனான இந்த கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சரின் வருகையால் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட அமித்ஷா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டதை தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, நிர்வாகிகள் மத்தியில் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.