Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AIADMK : அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்.. கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palaniswami About AIADMK Alliance | தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

AIADMK : அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்.. கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி
vinalin-sweety
Vinalin Sweety | Published: 08 Jun 2025 12:40 PM

சென்னை, ஜுன் 08 : தமிழகத்தில் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  அபார வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் திருமண நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி

சென்னை, அரக்கோணத்தில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது திருமண மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். தமிழகத்தில் நல்லாட்சி நிலவ அதிமுக கூட்டணியை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் – எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெரும் என்று கூறியுள்ளார்.

குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

மேலும் திமுகவின் குடும்ப அரசியலாக, குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார் ஸ்டாலின் என்று கூறியுள்ள அவர், திமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதனை கிடப்பில் போட்டு விடுவார்கள். அதிமுக ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திமுக செயல்படுத்தி வருகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வருடங்களில் ரூ.1.18 கோடியாக வளரக் கூடிய சிறிய முதலீடு!
18 வருடங்களில் ரூ.1.18 கோடியாக வளரக் கூடிய சிறிய முதலீடு!...
சிம்மத்தில் இணையும் கேது - செவ்வாய்.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க
சிம்மத்தில் இணையும் கேது - செவ்வாய்.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க...
வாடிவாசல் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் விளக்கம்
வாடிவாசல் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் விளக்கம்...
ஷமியின் இந்த பந்தால் 3 மாதம் பேட்டிங் செய்யவில்லை - ஸ்டீவ் ஸ்மித்
ஷமியின் இந்த பந்தால் 3 மாதம் பேட்டிங் செய்யவில்லை - ஸ்டீவ் ஸ்மித்...
நீரிழிவு நோய் இருந்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுமா?
நீரிழிவு நோய் இருந்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுமா?...
உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் 7 காலைப் பழக்கங்கள்...!
உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் 7 காலைப் பழக்கங்கள்...!...
கேவலமாக திட்டிய 2 பேர்.. சினிமாவே வேண்டாம் என போன பிரகதி!
கேவலமாக திட்டிய 2 பேர்.. சினிமாவே வேண்டாம் என போன பிரகதி!...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா!...
பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைந்து ஒரே படமாக வெளியிட திட்டம்
பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைந்து ஒரே படமாக வெளியிட திட்டம்...
மாயமான வேடசந்தூர் மருத்துவர், காரில் சடலமாக மீட்பு..
மாயமான வேடசந்தூர் மருத்துவர், காரில் சடலமாக மீட்பு.....
குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? - நீங்களே பாருங்க!
குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? - நீங்களே பாருங்க!...