AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுசா 4 மினி ஸ்டேடியம் வேண்டும்… சேலம் மக்கள் அரசுக்கு கோரிக்கை…

Salem Mega Cricket Stadium: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்புக்குப் பின், புதிய விளையாட்டுத் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன. சேலத்தில் மெகா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் கீழ், ஆத்தூர், மேட்டூரில் பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்காடு, கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மினி ஸ்டேடியம் கோரிக்கைகள் உள்ளன.

புதுசா 4 மினி ஸ்டேடியம் வேண்டும்… சேலம் மக்கள் அரசுக்கு கோரிக்கை…
சேலம் மெகா கிரிக்கெட் மைதானம்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Jun 2025 12:16 PM IST

சேலம் ஜூன் 11: தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, பல புதிய விளையாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, தற்போது ஆத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. சேலத்தில் மெகா கிரிக்கெட் ஸ்டேடியமும் திறக்கப்பட்டு, ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்காடு, கெங்கவல்லி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் மினி ஸ்டேடியம் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சில பகுதிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது மாவட்டத்தில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.

வீரர்களுக்கு நிதியுதவியும் பயிற்சியும் வழங்க நடவடிக்கை

தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, மாநிலத்தில் பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்களுக்கு நிதியுதவியும் பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் தமிழகத்தில் நடத்தும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை

 

View this post on Instagram

 

A post shared by P R O Salem (@pro.slm)

“>

மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம்

மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் அடிக்கல் நாட்டும் பணிகள் நடைமுறையில் உள்ளன. சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக சேலம் மாவட்டம் காட்டுவேப்பிலைப்பட்டியில் 16 ஏக்கரில் உருவான மெகா கிரிக்கெட் ஸ்டேடியம், தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற போட்டிகளுக்கு ஏற்றவாறு இருப்பதோடு, எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டிகளும் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மினி ஸ்டேடியம் கோரிக்கை

மீதமுள்ள கெங்கவல்லி, ஏற்காடு, ஒமலூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதில் ஏற்காடு, கெங்கவல்லி, தலைவாசல், சங்ககிரி ஆகிய பகுதிகளுக்காக மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைவாசல் மற்றும் கெங்கவல்லி 25 கி.மீ. தூரத்தில் உள்ள இடங்கள் என்பதால், இதில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து மினி ஸ்டேடியம் அமைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்காடு, சங்ககிரி ஆகியவை தனித்தனி தொகுதிகள் என்பதால் செயல்படுத்த சிக்கலில்லை.

விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சேலம் மாவட்டத்தில் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Follow Us