AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு.. உடலை அடக்கம் செய்ய சொன்ன நீதிபதி.. உறவினர்கள் எடுத்த அதிரடி முடிவு!!

இந்த வழக்கு நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில், "இறந்த வாலிபரின் உடல் கடந்த 100 நாட்களாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதால், அது பெருமளவு சிதைந்துவிட்டது.

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு.. உடலை அடக்கம் செய்ய சொன்ன நீதிபதி.. உறவினர்கள் எடுத்த அதிரடி முடிவு!!
வாலிபர் ஆகாஷ் டெலிசன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jun 2026 08:51 AM IST

மானாமதுரை, ஜுன் 17: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வாலிபர் ஆகாஷ் டெலிசன் மரண வழக்கில் தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது உடலை அதிகாரிகளே அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று மேல்முறையீடு செய்ய தீவிரமாக திட்டமிட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் மானாமதுரை பகுதியில் ஒரு அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக 24 வயதான வாலிபர் ஆகாஷ் டெலிசனை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, போலீஸ் காவலில் இருந்து ஆகாஷ் தப்பிக்க முயன்றதாகவும், அதில் அவரது கால் முறிந்ததாகவும் கூறி காவல்துறையினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிக்க: ‘நகையே இல்லாமல் அடகு’.. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. பகீர் தகவல்!!

காவல்துறையின் தாக்குதலே காரணம்:

காவல்துறையினரின் கடுமையான மற்றும் கொடூரமான தாக்குதலால் தான் ஆகாஷ் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினரும், சமுதாய அமைப்பினரும் குற்றம் சாட்டினர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது உரிய சட்டப்பிரிவுகளின் (எப்.ஐ.ஆர்) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை ஆகாஷின் உடலை வாங்கப் போவதில்லை என மறுத்து, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையிலேயே அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொடர் போராட்டங்களும் மானாமதுரையில் நடத்தப்பட்டு வந்தன.

விசாரணை மற்றும் அரசு வக்கீலின் வாதம்:

இந்த வழக்கு நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில், “இறந்த வாலிபரின் உடல் கடந்த 100 நாட்களாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதால், அது பெருமளவு சிதைந்துவிட்டது. இதனால் கடுமையான சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடலைத் தொடர்ந்து பாதுகாத்து வைப்பதால் எந்தவித விசாரணைப் பயனும் இல்லை. எனவே, அதிகாரிகளே சட்டப்படி இறுதிச்சடங்கு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.

மறுபுறம், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெறப்போவதில்லை என மனுதாரர் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்ற அடிப்படையில் உடலைப் பெற்றுக்கொள்ள மறுப்பதை நியாயப்படுத்த முடியாது. உறவினர்களின் இந்த நடவடிக்கை, இறந்தவருக்கு அளிக்க வேண்டிய கடமைகளுக்கு முரணாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், உரிமை கோரப்படாத உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

உறவினர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அவர்கள் உடலை வாங்க மறுத்ததால், ஆகாஷின் உடல் உரிமை கோரப்படாத உடலாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி விக்டோரியா கௌரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அவ்வுத்தரவில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மற்றும் பிற தகுதியுள்ள அதிகாரிகள் அனைவரும் இணைந்து ஆகாஷின் உடலை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இறந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடைப்பிடித்த மத நம்பிக்கை, ஜாதிய வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு முழுமையாக மதிப்பளித்து, இறுதிச் சடங்குகளை மிகவும் கண்ணியமான முறையில் அதிகாரிகள் முன்னின்று நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில், சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடர்ந்து தீவிரமாக நடத்தி, அதனை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிக்க: ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!

உறவினர்களின் அடுத்தகட்ட அதிரடி திட்டம்:

நீதிமன்ற உத்தரவின்படி, அதிகாரிகள் மூலம் இன்று ஆகாஷின் உடல் நல்லடக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி நீதிபதி அமர்வு பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் அனைவரும் ஏகோபித்தமாக இணைந்து, இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் முன்பே உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் இந்த அடுத்தகட்ட மேல்முறையீட்டுத் திட்டத்தால், மானாமதுரை இளைஞர் மரண வழக்கில் மீண்டும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Follow Us