AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சீமானிடம் தோளில் கைபோட்டு, சீரியஸாக டிஸ்கஸ் செய்த மு.க.ஸ்டாலின்.. ஒரே சோபாவில் 3 ஜாம்பவான்கள்..

இந்த சுபநிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, பிரபல மூத்த நடிகர் சத்யராஜ் இவ்விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேடையில் நடிகர் சத்யராஜை கண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

சீமானிடம் தோளில் கைபோட்டு, சீரியஸாக டிஸ்கஸ் செய்த மு.க.ஸ்டாலின்.. ஒரே சோபாவில் 3 ஜாம்பவான்கள்..
சீமான், மு.க.ஸ்டாலின், வைகோ
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Jun 2026 06:52 AM IST

புதுச்சேரி, ஜுன் 25: திரைப்பட இயக்குநரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முக்கிய ஆளுமையுமான வ.கௌதமன் – மல்லிகா தம்பதியினரின் மகள் பரஞ்சோதிக்கும், க.குணாநிதி என்பவருக்கும் புதுச்சேரி பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழா நேற்று (24.06.2026) மாலை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மிக முக்கிய அரசியல் நாகரிக நகர்வாக, வெவ்வேறு கொள்கை துருவங்களாகச் செயல்படும் மூன்று முக்கிய ஜாம்பவான்கள் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்.

மேலும் படிக்க: சிறுமிகளுக்கு முதலுதவி வழங்கியதை இழிவுபடுத்துவதா? அமைச்சர் விஸ்வநாதன் பதிலடி..

சீமானின் வரவேற்பும், தலைவர்களின் சந்திப்பும்:

இவ்விழாவில் மணமக்களை வாழ்த்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் முன்கூட்டியே வருகை தந்திருந்தனர். தொடர்ந்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விழா அரங்கிற்குள் வருகை தந்தார். மு.க.ஸ்டாலின் வருவதைக் கண்டதும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாகத் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று, அவருக்குப் பரஸ்பர வணக்கம் செலுத்தி மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்.

ஒரே சோபாவில் 3 ஜாம்பவான்கள்:

இதனைத் தொடர்ந்து, விழா மேடைக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பிரமுகர்களுக்கான வரிசையில், மு.க.ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகியோர் ஒரே சோபாவில் அருகருகே அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு அருகிலேயே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அமர்ந்திருந்தார். தேர்தல் களங்களிலும், அரசியல் மேடைகளிலும் கொள்கை ரீதியாகக் காரசாரமாக விவாதித்துக் கொள்ளும் இந்தத் தலைவர்கள், எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி புன்னகையோடு பரஸ்பரம் கைகுலுக்கி, நலம் விசாரித்து, சிறிது நேரம் சுமுகமாகக் கலந்துரையாடினர்.

சீமானுடன் சீரியஸ் டிஸ்கஷன்:

இவர்களுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். குறிப்பாக, ஒரே சோபாவில் அமர்ந்திருந்த மு.க.ஸ்டாலினும் சீமானும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து, ஏதோ ஒரு முக்கிய விஷயம் குறித்து மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதேசமயம், வைகோ ஸ்டாலினுடன் நெருக்கமாக பேச முயற்சித்தாலும், அவர் பெரிதாக பிடிக்கூடக்காதது போல இருந்துக்கொண்டார். எனினும், பெயரளவில் அவர் சபை நாகரிகத்துடன் அவர் கேட்டதற்கு பதிலளித்துவிட்டு, ஸ்டாலின் அமைதியாக இருந்தார்.

நட்சத்திரங்களின் சங்கமம்:

இந்த சுபநிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, பிரபல மூத்த நடிகர் சத்யராஜ் இவ்விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேடையில் நடிகர் சத்யராஜை கண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் அவருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

இயக்குநர் வ.கௌதமன் தனது மகள் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து அரசியல் தலைவர்களையும், சினிமா பிரபலங்களையும், தமிழ் உணர்வாளர்களையும் நெகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார்.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

பாராட்டும் அரசியல் விமர்சகர்கள்:

பொது வாழ்விலும் சமூக உறவுகளிலும் பேணப்பட வேண்டிய ‘தமிழர் மாண்பை’ பறைசாற்றும் விதமாக அமைந்த இந்த அரசியல் நாகரிக நகர்வு, திருமண விழாவிற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்த மூன்று தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முதன்மைப் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us