AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உருவாகும் புயல் – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் எச்சரிக்கை

Cyclone Alert : தென்கிழக்கு வங்ககடலில் நவம்பர் 13, 2026 இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16, 2026 மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவாகும் புயல் – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் எச்சரிக்கை
கோப்புப் படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2026 14:51 PM IST

சென்னை, நவம்பர் 13 : மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக தென்கிழக்கு வங்ககடலில் நவம்பர் 13, 2026 இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14, 2026 ஆழந்த காற்றழுத்தப் தாழ்வு பகுதியாகவும், நாளை மறுநாள் நவம்பர் 15, 2026 வாக்கில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் மண்டலமாகவும் வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 16, 2026 அன்று மாலை புயலாக (Cyclone) வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவாகும் புயல்

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14,2026 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15, 2026 அன்று காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16, 2026 மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லாமல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது” – மௌனத்தை கலைப்பாரா? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக நவம்பர் 13, 206 இன்றும் நவம்பர் 14, 2026 நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 15, 2026 ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை நவம்பர் 13, 2026 இன்றும் மற்றும் நவம்பர் 14, 2026 நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாகும் சூழலில் எங்கும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : சென்னையில் ‘நோ பார்க்கிங்’, நடைபாதை ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி.. AI தொழில்நுட்பத்துடன் புதிய திட்டத்தை கொண்டுவரும் காவல்துறை!!

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் நவம்பர் 13, 2026 முதல் 17, 2026 வரை பல்வேறு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 17, 2026 அன்று தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். அன்றைய தினம் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். இதனால், நவம்பர் 13, 2026 முதல் நவம்பர் 17, 2026 வரை குறிப்பிட்ட நாட்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us