AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆண்களுக்கும் வேண்டும் ‘Paternity Leave’.. 3-வது குழந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி!!

Paternity Leave for Men: குழந்தைகளை வளர்ப்பதில் தந்தைகளுக்கும் பொறுப்புள்ளதால் 'தந்தை விடுப்பு' வழங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகையைப் பெருக்க 3-வது குழந்தையை அரசு ஊக்கப்படுத்தக் கூடாது என்றும், மாணவர்கள் போராட்டத் தடை சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது சரியான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கும் வேண்டும் ‘Paternity Leave’.. 3-வது குழந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி!!
கார்த்தி சிதம்பரம் எம்.பி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Aug 2026 08:27 AM IST

சென்னை, ஆகஸ்ட் 20: காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு நடப்பு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, நாட்டில் வெறும் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிக்கும் நோக்கத்துடன் மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக, அரசாங்கக் கொள்கைகள் மூலம் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுப்பதை ஊக்கப்படுத்துவதைத் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். நமது சமூகத்திற்கு ஆரோக்கியமான மற்றும் நன்கு படித்த தலைமுறையே அவசியமே தவிர, வெறும் எண்களின் அடிப்படையில் எண்ணிக்கை அதிகரிப்பு தேவையில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க: மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!

ஆண்களுக்கும் ‘தந்தை விடுப்பு’ கட்டாயம் வேண்டும்:

மேலும், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு மட்டுமே உரித்தான ஒன்றல்ல, அதில் தந்தைகளுக்கும் சமமான பங்கு உண்டு என்பதை வலியுறுத்திய அவர், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதை முழுமையாக வரவேற்பதுடன், ஆண்களுக்கும் ‘தந்தை விடுப்பு’ கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்குத் தரமான கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு தேவைப்படும் நிலையில், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அந்த வசதிகள் இருக்கிறதா என்பதை யோசிக்காமல், தேவையில்லாமல் மக்கள் தொகையை உயர்த்த ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் அளிப்பது ஏற்புடையதல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அப்படி அறிவிப்பை வெளியிட்டிருக்கக் கூடாது:

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, பின்னர் கடுமையான எதிர்ப்புகளால் அது திரும்பப் பெறப்பட்ட விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். மாணவர்கள் போராட்டத்திற்குத் தடை விதிக்கும் வகையிலான அறிவிப்பை முதலிலேயே வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், அந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பை அதிகாரிகளே வெளியிட்டார்களா அல்லது அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் வெளியானதா என்பது தெரியவில்லை என்றாலும், வாபஸ் பெறப்பட்ட முடிவு சரியானதே என அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நாங்களே கேட்காத பல வசதிகள் கேட்கும் எம்.எல்.ஏ-க்கள்:

இவற்றுடன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயணப் படி மற்றும் சலுகைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தாங்களே கேட்காத பல வசதிகளை எம்.எல்.ஏ-க்கள் எதிர்பார்ப்பதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில், தமழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தைத் தாண்டி தேசிய அரசியலில் களம் இறங்க அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்த கருத்தையும் கார்த்தி சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

Follow Us