நான் வீட்ல இருப்பேன்.. இல்ல ஆபீஸ்ல இருப்பேன்.. விஜய்யை அட்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஜூலி!

Julie Video About Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மீண்டும் அட்டாக் செய்து ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக் பாஸில் பங்கேற்றிருந்த ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நான் வீட்ல இருப்பேன்.. இல்ல ஆபீஸ்ல இருப்பேன்.. விஜய்யை அட்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஜூலி!

விஜயை அட்டாக் செய்து ஜூலி மீண்டும் வீடியோ வெளியீடு

Updated On: 

25 Feb 2026 16:32 PM

 IST

வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்த ஜல்லிக்கட்டு காளையை சிறுவன் ஒருவர் புல்லுக்கட்டை காண்பித்து அடக்கி இருந்தார் என்ற குட்டி கதையை கூறியிருந்தார். இது தொடர்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஜூலி என்ற பெண் இது குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தில் 18 வயதுக்கு குறைவாக அதிக சிறுவர்கள் இருப்பதால் புல்லுக்கட்டை காண்பித்து ஜல்லிக்கட்டு காளையை அடக்கியதாக நீங்கள் கூறியதை கேட்டு அவர்கள் விபரீதமான செயலில் ஈடுபட்டால் கரூர் உயிரிழப்பு சம்பவத்தை விட அதிகமாக நிகழ்ந்து விடும் என்றும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேசுமாறு கூறியிருந்தார்.

விஜய்யை அட்டாக் செய்த ஜூலி

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சிலர் ஜூலிக்கும், அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கும் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு பிரபலம் ஜூலி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜய் அண்ணா, உங்கள் வேலூர் பரப்புரையை பார்த்துவிட்டு அதில் எதுவும் இல்லை என்ற ஆதங்கத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தேன். இதற்கு உங்களது ரசிகர்கள், அவர்கள் ரசிகர்கள் மட்டுமாகவே உள்ளனர். தற்போது வரை அவர்கள் அரசியல் வயப்படவில்லை. இவர்கள் அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் என்னை கடித்து (விமர்சனம் செய்து) வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: சுதந்திர போராட்டம் முதல் கடைசி காலம் வரை.. நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

வீடியோவை அழிக்கவும் மாட்டேன்-கருத்தில் பின்வாங்கவும் மாட்டேன்

இந்த மைனர் பசங்களிடம் பெரும்பாலும் இருப்பது போலியான சமூக வலைதள பக்கங்கள் தான். இதை வைத்து தான் என்னை மிரட்டி வருகின்றனர். இதற்காக பயந்து நான் முதலில் பதிவேற்றம் செய்த வீடியோவை அழிக்கவும் மாட்டேன். எனது கருத்துக்களில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பிரவாயில்லை. ஆனால், என்னை சார்ந்தவர்களையும் மிரட்டி வருவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் வீட்டில் இருப்பேன் அல்லது ஆபீஸில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால், அவங்களை விட்டு விடுங்கள்.

தவெக மத்தியில் பெண்களுக்கு மரியாதை இல்லை

ஓ… நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்கல்ல. நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். நான் வேண்டுமென்றால் பனையூர் வருகிறேன். என்னை திட்டினாள் என்னை திட்டுகின்ற மாதிரிதான். மக்களை திட்டின மாதிரி தான் என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சோசியல் மீடியாவில் எவ்வளவு மரியாதையும், எவ்வளவு மதிப்பும், எவ்வளவு பாதுகாப்பும் உங்கள் ரசிகர் மத்தியில் இருக்கிறது என்பதை நான் வெளியிட்ட வீடியோவில் கமெண்ட் பதிவை டைம் இருந்தால் படித்து பாருங்கள். நன்றி அண்ணா என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!