சென்னையில் தபால் வாக்குப்பதிவு.. ஏப்ரல் 16, 17 மற்றும் 18 நடக்கும் என அறிவிப்பு..
Tamil Nadu Assembly Election: தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வரும்போது அவர்களுக்கு ரேம்ப் அமைத்தல், வாக்காளர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை, ஏப்ரல் 13, 2026: சென்னையில் தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் சூழலில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்னும் ஓரிரு நாட்களில் களத்தில் உங்களை சந்திப்பேன் – மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்..
தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்:
இதற்காக தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வரும்போது அவர்களுக்கு ரேம்ப் அமைத்தல், வாக்காளர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் 3 நாட்கள் நடக்கும் தபால் வாக்குப்பதிவு:
இந்த நிலையில், தபால் வாக்குப்பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சேலத்தில் கொடூரம்.. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்..
இந்தத் தொகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் (85 வயதுக்கு மேற்பட்டோர்) மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே மேற்கண்ட தேதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிப்பார்கள்.
மேலும், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தபால் வாக்கு மையங்களில் நடைபெறும். அப்போது அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.