AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேலத்தில் கொடூரம்.. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்..

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியையாக ஸ்ரீவித்யா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் விஜயமுருகனுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சேலத்தில் கொடூரம்.. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 13 Apr 2026 16:10 PM IST

சேலம், ஏப்ரல் 13, 2026:  சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியையாக ஸ்ரீவித்யா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் விஜயமுருகனுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியையை வெட்டி கொலை செய்த நபர்:

இந்த நிலையில், வழக்கம்போல் இன்று ஸ்ரீவித்யா பள்ளிக்கு வேலைக்காக வந்துள்ளார். அப்போது அவரது கணவர் விஜயமுருகன் பள்ளிக்கு வந்து அவருடன் பேசியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென ஆத்திரமடைந்த விஜய் முருகன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீவித்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ஸ்ரீவித்யா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதைக் கண்ட விஜயமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மேலும் படிக்க: அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை – பரபரப்பு தகவல்

உயிரிழந்த ஆசிரியை:

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீவித்யாவை அங்கு இருந்த சக ஊழியர்கள் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: 3 நாட்கள் மது விற்பனைக்கு தடை… மீறினால் பாயும் நடவடிக்கை.. கலால் துறை அதிரடி உத்தரவு!

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய விஜய் முருகனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை வெட்டி கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us