Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விடைபெற்ற தென்மேற்கு பருவமழை…. தீபாவளிக்கு மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்

Northeast Monsoon : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அன்றைய தினம் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடைபெற்ற தென்மேற்கு பருவமழை…. தீபாவளிக்கு மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Oct 2025 15:46 PM IST

இந்தியா முழுவதும் தீபாவளி (Diwali) பண்டிகை வருகிற அக்டோபர் 20,02025 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளியன்று மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. காரணம் தீபாவளி என்றாலே பட்டாசு தான். இந்த நிலையில் மழை பெய்தால் பட்டாசு வெடிக்க முடியாது என்ற காரணத்தால் அன்றைய தினம் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வட கிழக்கு பருவமழை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வட கிழக்கு பருவமழை எப்போது ?

இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை விடைபெற்றதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், சிக்கிம், மகாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியது. இதனையடுத்து வரும் அக்டோபர் 16 முதல் 18,2025 வரையிலான நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : படிப்படியாக குறையும் வெப்பநிலை.. இனி மழை மட்டும் தான்.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிக்கு மழை வருமா என்பதை 5 நாட்களுக்கு முன்பு ம்டடுமே உறுதியாக சொல்ல முடியும். எனவே அக்டோபர் 20, 2025 அன்று மழை வருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக கன மழை பெய்யும் எனவும் தென் மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக மழை பெய்தால் பட்டாசுகளில் முதலீடு செய்துள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படிக்க : இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

14 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியில் கனமழை?

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியின் போது கடுமையான மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தீபாவளி கொண்டாட்டம் கடுமையாக பாதித்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் சூழல் நிலவுகிறது. இருப்பினும் வட மாவட்டங்களில் மட்டுமே வடகிழக்கு பருவமழையால் மழை இருக்கும் எனவும், தென் மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தமிழ்நாடு வெதர்மேனும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.