AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க மக்களே..

கிண்டி ரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகவே சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்களை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க மக்களே..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Sep 2026 09:24 AM IST

செப்டம்பர் 26, 2026: சென்னையில் கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக குறிப்பிட்ட இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள்:

அதன்படி, செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.

மேலும், செப்டம்பர் 27ஆம் தேதி மட்டும் தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

கிண்டி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள்:

கிண்டி ரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகவே சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்களை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமான பிற ரயில் சேவைகள் குறித்து பயணிகள் ரயில்வே அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஊட்டியில் சாலையில் சென்ற பேருந்தின் சக்கரம் கழன்றதால் பரபரப்பு.. அடுத்து நடந்தது என்ன?

முக்கிய போக்குவரத்து வழித்தடம்:

சென்னை கடற்கரை–தாம்பரம் வழித்தடம் நகரின் முக்கிய புறநகர் ரயில் வழித்தடங்களில் ஒன்றாகும். சென்னை கடற்கரை, சென்னை பார்க், சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் இந்தப் பாதையில் உள்ளன.

குறிப்பாக இரவு நேரத்தில் பணிக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலம்.. சொந்த ஊர் திரும்ப போதிய பேருந்து, ரயில் வசதியின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் திண்டாட்டம்!

பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நேரத்தில் ரயில் இயக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்கமான ரயில் சேவைகள் குறித்த நேர அட்டவணை மற்றும் மாற்றங்களை பயணிகள் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Follow Us