தவெகவில் 11 முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி..
CM Vijay: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, வெல்லமண்டி என். நடராஜன், வைகைச்செல்வன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் 26, 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 15 பேரை துணைப் பொதுச்செயலாளர்களாகவும், ஒருவரை மாவட்டக் கழகச் செயலாளராகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர்களில் 11 பேர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆவர்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, வெல்லமண்டி என். நடராஜன், வைகைச்செல்வன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: மேடையில் அந்நியன்.. களத்தில் அம்பி.. முதல்வர் விஜய்யின் ஆட்சியை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!
15 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம்:
- எம்.எஸ்.எம். ஆனந்தன் – முன்னாள் அமைச்சர், திருப்பூர் வடக்கு
- எம்.சி. சம்பத் – முன்னாள் அமைச்சர், கடலூர்
- கே. இராதாகிருஷ்ணன் – முன்னாள் அமைச்சர், உடுமலைப்பேட்டை
- கே.வி. ராமலிங்கம் – முன்னாள் அமைச்சர், ஈரோடு மேற்கு
- எம். ஆனந்தன் – முன்னாள் அமைச்சர், உளுந்தூர்பேட்டை
- கடம்பூர் ராஜு – முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி
- கே.டி. பச்சைமால் – முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி
- வெல்லமண்டி என். நடராஜன் – முன்னாள் அமைச்சர், திருச்சி கிழக்கு
- என்.ஆர். சிவபதி – முன்னாள் அமைச்சர், முசிறி
- வைகைச்செல்வன் – முன்னாள் அமைச்சர், விருதுநகர்
- எஸ். வளர்மதி – முன்னாள் அமைச்சர், ஸ்ரீரங்கம்
- டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த் – சென்னை
- கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன் – திருப்பூர்
- தொள்ளமூர் கண்ணன் – விழுப்புரம்
- வி.சி.ஆர். குமரன் – திருவள்ளூர்
இதனிடையே, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. காவல் அதிகாரிகள் மாற்றம்.. சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!
புதிய நிர்வாகிகள் அனைவரும் கட்சித் தலைவர் விஜயின் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச்செயலாளர் என். ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நிர்வாகிகளுக்கு கட்சித் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.