AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜோசப் விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவு சின்னம்… முதல்வரை வறுத்தெடுத்த சிவசங்கர்!

Sivasankar Criticized CM Vijay: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் முதுகை காட்டி ஒடிய முதல்வர் ஜோசப் விஜய்யின் முதுகுதான் கரூர் மக்களின் நினைவு சின்னமாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்தார்.

ஜோசப் விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவு சின்னம்… முதல்வரை வறுத்தெடுத்த சிவசங்கர்!
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Jul 2026 21:55 PM IST

கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஜோசப் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இவரது கருத்துக்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் எதிர்வினை ஆற்றி உள்ளார். தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் தமிழக முதல்வர் விஜய் மீது உள்ள தவறை மறைத்து விட்டு திமுக மீது பழி போட்டுள்ளார். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று மிகப் பெருந்தன்மையுடன் மு. க. ஸ்டாலின் கூறியிருந்தார். அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் ஆவார். அவரையும், உங்களையும் எந்த விதத்தில் ஒப்பிட முடியும். கரூரை விட்டு ஓடியது யார் என்பது அந்த மாவட்ட மக்களுக்கு தெரியும். அந்த முதுகு தான் கரூர் மக்களுக்கு நினைவு சின்னமாக இருக்கும்.

தொண்டர்கள் உயிரிழப்பதை எந்த தலைவனும் விரும்பமாட்டார்

குற்றம் சுமத்த வேண்டும் என முடிவு செய்திருந்தால் குற்றம் சுமத்தியதோடு இருக்க முடியாது வழக்கே போட கூறி இருக்கலாம். ஒரு வேளை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் என்ன நிலைமை ஆகி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். பெருந்தன்மையாக ஒரு அரசியல் கட்சி தலைவர் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள். என்று நீங்கள் மனதில் பட்டதை எல்லாம், வாயில் வந்ததை எல்லாம் பேசி உள்ளீர்கள். அடுத்தது ஒரு வசனம் சொல்லி இருக்கிறீர்கள், எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதிற்கு ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது என்று.

மேலும் படிக்க: நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!

250 நாள்கள் கழித்து கரூர் வந்தது ஏன்

அதிகமான வலிகள், அதிகமான காயங்களை தாண்டி தான் வந்துள்ளேன். என் வாழ்வில் அதிக வலி மற்றும் காயம் கொடுத்தது கரூர் சம்பவம் தான் என்று கூறியுள்ளீர்கள். மக்களை சந்திக்கவும், மக்களிடம் பேசவும் கருவூருக்கு வந்தேன் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஆனால், எத்தனை நாட்கள் கழித்து அவர் வந்துள்ளார். கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்து 250 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதுதான் திமுக ஆட்சி உங்களை கரூருக்கு செல்ல விடாமல் தடுத்தது என்றால், தவெக ஆட்சி அமைந்து 2 மாதம் ஆகியும் தற்போதைய கரூர் சென்றுள்ளீர்கள்.

இடைத்தேர்தலை மையமாக வைத்தே முதல்வர் கரூர் பயணம்

எனவே, இடைத்தேர்தலை மையமாக வைத்து தான் முதல்வர் விஜய் கரூர் சென்றுள்ளார். துயரத்தில் இருப்பதாக கூறும் விஜய் திருமண விழாக்களில் மகிழ்ச்சியாக பங்கேற்றார். தன் மீதான தவறுகளை மறைத்து திமுக மீது குற்றம் காட்டுகிறார். இன்று நேரத்துக்கு சென்ற விஜய் பிரச்சாரத்துக்கு தாமதமாக சென்றது ஏன். தான் முதல்வர் என்பதை மறந்து விட்டு பேசி உள்ளார் விஜய் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ரூ.35 கோடி பேரம்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. தவெக எம்எல்ஏ வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது!

Follow Us