உங்க கனவை சொல்லுங்கள்.. எனக்கு நயன்தாரா வேண்டும் – நிறைவேற்றுவாரா முதல்வர் – சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு..
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் திமுக அரசை கண்டித்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம், மார்ச் 17, 2026: சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகம் முழுவதும் மார்ச் 17, 2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் திமுக அரசை கண்டித்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் படிக்க: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; அடுத்த 7 நாட்களில் வெப்பம் குறையும்
அப்போது கூட்டத்தின் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை விமர்சித்தார். அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
சி.வி சண்முகத்தின் சர்ச்சை பேச்சு:
அதை விமர்சிக்கும் வகையில் பேசிய அவர், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். முதலமைச்சர் அதைவிட ஒரு படி மேலே போய் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். எனக்கு நயன்தாரா வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அதை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?” என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும் படிக்க: நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டி கொன்ற கணவர்!
இந்த பேச்சு தற்போது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்த சர்ச்சை பேச்சு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் விளக்கம்:
இதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக அரசுக்கு எதிரான சட்டம்-ஒழுங்கு, பாலியல் வழக்குகள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் குறித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, ஸ்டாலின் “கனவு கூறுங்கள்” என்ற திட்டம் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது தவறுதலாக Nayantharaவின் பெயர் உச்சரிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டதாகவும், எந்த விதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.