AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டி கொன்ற கணவர்!

Husband Hacks Wife to Death: நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்ப தகராறு மற்றும் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கொலைக்கு பின் கணவர் சரணடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டி கொன்ற கணவர்!
மாதிரிப் புகைப்படம்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Mar 2026 12:43 PM IST

நெல்லை பேருந்து நிலையத்தில் வைத்து மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் என்ற இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், ஆத்திரத்தில் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குடும்ப உறவுகளின் சிக்கல்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் போன்ற இடத்தில் இப்படிப்பட்ட கொடூரம் நடந்தது பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

குடும்ப பின்னணி மற்றும் கருத்து வேறுபாடு

நெல்லை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் கருத்து வேறுபாடு முற்றியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மனைவி பேச்சியம்மாள் தனக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், சுதாகர் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பேருந்து நிலையத்தில் நடந்த கொடூரம்

இந்த நிலையில், பேச்சியம்மாள் இன்று (மார்ச் 15) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்த அவரது கணவர் சுதாகர் பேருந்து நிலையத்தில் வைத்து பேச்சியம்மாளை வழிமறித்து பேசியுள்ளார். அதில் கோபமடைந்த பேச்சியம்மாளுக்கும், சுதாகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுதாகர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை தாக்க முயன்றுள்ளார்.

தப்பிக்க முயன்றும் உயிரிழந்த மனைவி

அதனைக் கண்டு சுதாரித்த பேச்சியம்மாள் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் விடாது துரத்தி சென்ற சுதாகர் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவம் நடந்த உடனே அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

Also Read: காரில் எரிந்த நிலையில் முன் இருக்கையில் ஆண்.. பின் இருக்கையில் இரு குழந்தைகளுடன் பெண் சடலம்.. 

போலீசார் நடவடிக்கை மற்றும் கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து நிலையத்தின் புறக்காவல் நிலையத்திலிருந்த போலீசார், பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், சுதாகர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரணடைந்தார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி தகவல்

முதல்கட்ட விசாரணையில், பேச்சியம்மாள் அடிக்கடி செல்ஃபோனில் பேசியதால், அவரது நடத்தையின் மீது சந்தேகப்பட்டு சுதாகர் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாகவே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பேச்சியம்மாள் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பதற்காக நெல்லை சந்திப்பு அருகே உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தும் வந்துள்ளார். தினமும் பாலமடையில் இருந்து பேருந்தில் நெல்லை சந்திப்புக்கு வருவது வழக்கம். இன்றும் வழக்கம்போல் அவர் வேலைக்கு வந்தபோது சுதாகர் அவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow Us