Tamil Nadu Sports Development Department Budget 2026: விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு… நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!
Tamil Nadu Budget Sports Development Department Rs.1051 Crore Allocation : தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சி மையமும் அமைக்கப்பட உள்ளது .
தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் இன்று (ஆகஸ்ட் 5- ஆம் தேதி ) தாக்கல் செய்தார். இதில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் ரூ. 50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். பழங்குடியினர் குடியிருப்பு வீடுகள் சாலைகள் குடிநீர் வசதி கல்வி சார்ந்த உதவித்தொகை திட்டங்கள் பள்ளி மற்றும் விடுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
ஹஜ் பயண மானியம் உள்ளிட்ட உயர்வு
ஹஜ் பயண மானியம் ரூ.2, 500- இல் இருந்து ரூ. 35 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ. ஆயிரத்து 05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் கல்லறை தோட்ட மேம்பாட்டுக்கு ரூ. 34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு நவீன வசதியுடைய மிதிவண்டிகள்
மேலும், அரசுப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மிதிவண்டிகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட் தொடர்பான முழு விவரம்: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!