AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் செலவுக்கான உணவு மற்றும் பிரசார விலைப்பட்டியல் வெளியீடு

Election Commission: தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் விரிவான விலைப்பட்டியல் வெளியிட்டுள்ளது. உணவு, சிற்றுண்டி மற்றும் பிரசார பொருட்களுக்கு நிர்ணய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனுமதி பெற்று மட்டுமே கூட்டங்கள் நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் செலவுக்கான உணவு மற்றும் பிரசார விலைப்பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த நிதி ஒதுக்கீடு
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 17 Mar 2026 12:04 PM IST

தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விலைப்பட்டியல் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவீனங்கள் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் அரசியல் கட்சிகள், “சுவிதா” எனப்படும் இணைய செயலி மூலம் குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஒற்றைச்சாளர முறையின் மூலம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரசார உணவுகளுக்கான விலை நிர்ணயம்

பிரசார நிகழ்ச்சிகளின் போது வழங்கப்படும் உணவுகளுக்கான செலவுகளும் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அசைவ உணவு ரூ.350, சைவ உணவு ரூ.110 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெஜ் பிரியாணி ரூ.50, வெரைட்டி ரைஸ் ரூ.45, 2 இட்லி ரூ.40, சப்பாத்தி அல்லது பூரி (2) ரூ.60, பொங்கல் ரூ.50, வடை ரூ.15 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மினரல் வாட்டர் ரூ.15, மட்டன் பிரியாணி ரூ.180, சிக்கன் பிரியாணி ரூ.110, டீ ரூ.12, காபி ரூ.18 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உணவுகளின் வகை மற்றும் அளவைப் பொருத்து செலவுகள் கணக்கிடப்படுகின்றன.

சிற்றுண்டி மற்றும் பிற உணவு பொருட்கள் விலை

சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஜிட்டபிள் உணவு மற்றும் வெரைட்டி ரைஸ் பாக்ஸ் ரூ.50 ஆகவும், 100 கிராம் ஸ்நாக்ஸ் (உலர் பழம் தவிர்த்து) ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிப்பு வகைகள் 100 கிராமுக்கு ரூ.90 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பட்டியல் மூலம் தேர்தல் காலத்தில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் போது செலவுகள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும்.

Also Read: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை 

பிரசார பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான விலை நிர்ணயம்

உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, பிரசார நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு பிளாஸ்டிக் இருக்கைக்கு ரூ.11, மேஜைக்கு ரூ.110, குஷன் இருக்கைக்கு ரூ.165, தனி சோபாவுக்கு ரூ.380 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கட்சிக் கொடிகள், அலங்கார பொருட்கள் போன்றவற்றிற்கும் தனித்தனியான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பிரசார நிகழ்ச்சிகளுக்கான கூடுதல் செலவுகள்

பிரசார நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கலாச்சார மற்றும் பாரம்பரிய அம்சங்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எட்டு அடி நீளமுள்ள கட்சிக் கொடிக்கு ரூ.40, வாழைமரம் ஒன்றுக்கு ரூ.750, பட்டாசு வெடிப்பதற்கு ஆயிரம் வாலா ரூ.650 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மேள தாளம் 4 மணி நேரத்திற்கு ரூ.6,500, குதிரைகள் பயன்படுத்த ரூ.6,000, கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் 3 மணி நேரத்திற்கு ரூ.11,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த விரிவான விலைப்பட்டியல், தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்துவதோடு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செலவுகளை வெளிப்படையாக பதிவு செய்ய உதவுகிறது.

Follow Us