AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

Edappadi K Palaniswami : கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொது்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையில் செங்கோட்டையன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா? என கேள்வி எழுப்பினார்.

அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
விஜய் - செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Nov 2025 19:54 PM IST

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் (Sengottaiyan) சமீபத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அங்கு அவருக்கு நிர்வாக குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக அவர் தனது  கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தார்.  இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) பரப்புரையில் ஈடுபட்டார். அந்த தொகுதியில் செங்கோட்டையன் கிட்டத்தட்ட 8 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையில் செங்கோட்டையன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு கொங்கு மண்டலத்திற்கான அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் பேசி எடப்பாடி பழனிசாமி,  கோபிசெட்டிபாளையம் நகரமே அதிரும் அளவிற்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. உங்களுடைய ஆரவாரம் வரும் சட்டமன்றத் தேர்தலில், கோபியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை காட்டுகிறது யார் யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அந்தக் கனவை நொறுக்கிவிட்டீர்கள் என்றார்.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..

மேலும் பேசிய அவர்,  இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார்.
ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?  கிட்டதட்ட 2,3 ஆண்டு காலமாக இயக்கத்திற்குள் இருந்துகொண்டே இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டார். அதனால்தான் நீக்கப்பட்டார்”அதிமுக ஆட்சி மலர்ந்த பிறகு கோபிசெட்டிபாளையம் தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேல் வளரும். தமிழகத்தில் முதன்மையான தொகுதியாக கோபிசெட்டிபாளையம் தொகுதி வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ

 

இதையும் படிக்க : ஆபத்தில் ஓடியவர்கள், “தவெக குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்”.. சபாநாயர் அப்பாவு தாக்கு!!

வருகிற 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். அதில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக நிறைவேற்றியுள்ளது. அதிமுக குழந்தைக்கு பேர் வைத்துள்ளார் ஸ்டாலின். நான்கு வழிச்சாலையை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத கையாலாகாத, திறமையற்ற அரசு செயல்பட்டு வருகிறது என்றார்

Follow Us