திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா.. பின்னணி என்ன?

DMDK Chief Premaltha Meets CM MK Stalin : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்துள்ளார். அப்போது, முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா.. பின்னணி என்ன?

பிரேமலதா - முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

31 Jul 2025 13:26 PM

சென்னை, ஜூலை 31 : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை (MK Stalin) தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா (Premalatha Vijayakanth Meets MK Stalin) சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்துள்ளார். அப்போது, முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினுடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர். 2025 ஜூலை 21ஆம் தேதி தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.  அதன்படியே முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார்.

மருத்துவமனையில் இருந்தபடியே சில முக்கிய பணிகளை அவர் மேற்கொண்டார். 2025 ஜூலை 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  அதன்பிறகு, சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் 2025  ஜூலை 31ஆம் தேதியான வழக்கமான தனது பணிகளை தொடங்கி உள்ளார். இதற்கிடையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்று,  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரை சந்தித்தார்.

Also Read : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை – அமைச்சர் துரைமுருகன்!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த் உடன் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சதீஷ் சென்று இருந்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் எ.வ.வேலு, துர்கா ஸ்டாலின் உடன் இருந்தன19652ர். இந்த சந்திப்பின்போது, முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அவர் கேட்டறிந்தார்.

முதல்வர் சந்தித்ததில் 100 சதவீதம் அரசியல் காரணங்கள் இல்லை எனவும் நட்புரீதியாக, முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய மட்டுமே சந்தித்தோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சேர இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு பெரிதும் அரசியல் ரீதியாக  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  மேலும், தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கவில்லை.

Also Read : 10 நாட்களுக்கு பின்.. தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்!

2026 ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் தனது கூட்டணி நிலைப்பாட்டை தேமுதிக தெரிவிக்க உள்ளது.  மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பது கேள்விக் குறிதான். எனவே, தேமுதிக திமுக கூட்டணியில் இணையுமா அல்லது தவெகவுடன் கூட்டணி வைக்குமா என பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.