கோவையில் கொடூரம்.. 2 சவரன் நகைக்காக பட்டப்பகலில் பெண் கொலை.. உடைந்த வளையலால் சிக்கிய கொலையாளி..
Tragic Road Accident Near Perambalur: பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் காரில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, செப்.24: கோவையில் கடந்த சில நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் பதிவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது பட்டப்பகலில் நடந்த மேலும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் வெற்றிலைக்காரர் வீதியைச் சேர்ந்த 54 வயதான விஜயலட்சுமி என்பவரது மகளுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், அவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மகள் வீட்டில் இருந்தோ அல்லது அருகில் உள்ள இட்லி கடையில் இருந்தோ அன்றாடம் உணவு வாங்கி வரப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகக் கண்டறியப்பட்டு, அவரது மகள் உடனடியாகக் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!
தடயவியல் ஆய்வு மற்றும் சிசிடிவி விசாரணை:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் காவல் துறையினர், விஜயலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆரம்பத்தில் சந்தேக மரணம் எனக் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது தெரியவந்ததுடன், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய தடையவியல் துறையினர், சம்பவ இடத்தில் இருந்து உடைந்த சில வளையல் துண்டுகளைச் சேகரித்தனர். அந்த வளையல்கள் உயிரிழந்த பெண் பயன்படுத்தியவை அல்ல என்பதை உறுதி செய்த போலீசார், வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு வந்து சென்றது தெரியவந்தது.
நகைக்காக நடந்த கொடூரக் கொலை:
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அங்கு வந்து சென்ற பெண் உயிரிழந்த பெண்ணின் வீட்டின் அருகே இட்லி கடை நடத்தி வரும் 42 வயதான விஜயலட்சுமி என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரைப் பிடித்துக் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் உண்மைகள் வெளிவந்தன. தனியாக இருக்கும் மூதாட்டி விஜயலட்சுமியை நோட்டமிட்ட இட்லி கடை விஜயலட்சுமி, மதிய நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து 2 சவரன் தங்கச் சங்கிலியைத் திருட முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் போடவே, அவரது வாயைப் பொத்தி கீழே தள்ளியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்துக் கொலையாளி விஜயலட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 சவரன் நகைகாகப் பக்கத்து வீட்டுப் பெண்ணே பட்டப்பகலில் இந்தக் கொடூரத்தைச் செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!
போலீசாரின் புலனாய்வும் குற்றவாளி சிக்கிய விதமும்:
இந்தக் கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் மேற்கொண்ட நுணுக்கமான புலனாய்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது. சிசிடிவி பதிவுகளைக் கூர்ந்து கவனித்த தனிப்படை போலீசார், இட்லி கடை விஜயலட்சுமி மூதாட்டியின் வீட்டிற்குள் செல்லும் போது கைகளில் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்ததையும், வெளியே வரும்போது கைகளில் வளையல்கள் இல்லாமல் இருந்ததையும் துல்லியமாகக் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த கண்ணாடி வளையல்களும் இவருடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசாரின் கெடுபிடி விசாரணையில் அவர் தப்ப முடியாமல் குற்றத்தை ஒப்புக் கொண்டார். திருட்டின் போது மூதாட்டி கூச்சலிட்டதால் பயந்துபோய் வாயை பலமாக பொத்திய போது ஏற்பட்ட போராட்டத்திலேயே வளையல்கள் உடைந்ததாக விசாரணையில் அம்பலமானது.