AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்யின் கார் ஓட்டுநர் மகன் டூ தமிழக அரசின் கொறடா – யார் இந்த சபரிநாதன்?

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் கட்சி உறுப்பினர்களை வழி நடத்த உறுவாக்கப்பட்ட பதவி தான் கொறடா. குறிப்பாக சட்டமன்றத்தில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்சித் தலைமை விரும்பும்படி வாக்களிப்பதை உறுதி செய்வதே இந்த பதவியின் பொறுப்பு ஆகும்.

விஜய்யின் கார் ஓட்டுநர் மகன் டூ  தமிழக அரசின் கொறடா – யார் இந்த சபரிநாதன்?
சபரிநாதனுடன் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 May 2026 20:05 PM IST

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜய் முதல்வராகியிருக்கிறார். இந்த நிலையில் வருகிற மே 13, 2026 அன்றுக்குள் தவெக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான வாக்கெடுப்பு மே 13, 2026 நாளை சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையில் தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் கட்சி உறுப்பினர்களை வழி நடத்த உறுவாக்கப்பட்ட பதவி தான் கொறடா. குறிப்பாக சட்டமன்றத்தில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்சித் தலைமை விரும்பும்படி வாக்களிப்பதை உறுதி செய்வதே இந்த பதவியின் பொறுப்பு ஆகும்.

இதையும் படிக்க : இடதுசாரி – வலதுசாரி அரசியல் கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு.. அரசியல் நாகரீகம் என புகழாரம்!

யார் இந்த சபரிநாதன்?

சட்டப்பேரவையில் தவெக கட்சி சார்ந்த அலுவல்களில் கொறடாவே முக்கிய முடிவுகளை முடிவெடுப்பார். இந்த நிலையில் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள சபரிநாதன் விஜய்யின் கார் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2026 சட்டமன்றத்தில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொதுவாக, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் ஆட்சியமைக்கும் கட்சியில் இருந்து, ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு, அவர் அரசு கொறடாவாக அறிவிக்கப்படுவார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் சார்பிலும் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு கொறடா தேர்வு செய்யப்படுவார்.

திருமாவளவனுடன் முதல்வர் சந்திப்பு

இதையும் படிக்க :  நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக அரசு முன்னெடுக்கவேண்டும்.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இந்த நிலையில் மே 13, 2026 அன்று காலை தவெக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதற்காகவே விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் அரசு மீது  மே 13, 2026  காலை 9.30 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதல்வர் விஜய் முன்மொழியும் அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் முடிவுகளை தெரிவிக்கவுள்ளனர். தர்போது வரை முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு போதுமான ஆதரவு உள்ளது.

Follow Us