Virat Kohli: விராட் கோலிக்கு எதிராக பேசினால் பணம்.. பகீர் கிளப்பிய ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர்!
Lizlaz on Virat Kohli: ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ் சிலர் தன்னைத் தொடர்புகொண்டு, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து தவறான கருத்துகளை கூறினால், தனக்கு பணம் தருவதாக கூறினார்கள் என்று தெரிவித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு (Virat Kohli) இந்தியா மட்டுமின்றி, உலகளவில் கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளன. இந்தநிலையில், ஜெர்மன் இன்ஃப்ளூயன்சரான லிஸ்லாஸின் (Lizlaz) புகைப்படங்களில் ஒன்றை விராட் கோலி லைக் செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, உலகளவில் லிஸ்லா மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து, லிஸ்லாஸிற்கு பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ வாய்ப்புகள் என கொடி கட்டி பறக்க தொடங்கினார். இதுபோன்ற சூழ்நிலையில், ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ் சிலர் தன்னைத் தொடர்புகொண்டு, கோலி குறித்து தவறான கருத்துகளை கூறினால், தனக்கு பணம் தருவதாக கூறினார்கள் என்று தெரிவித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
ALSO READ: ஐசிசி ஓராண்டு கால ஒருநாள் தரவரிசை.. முதலிடத்தில் இந்திய அணி ஆதிக்கம்!




லிஸ்லாஸ் கூறியது உண்மையா..?
Some journalists pushed and even offered money to LizLaz (German-SA influencer) to throw some shades on Virat Kohli because Virat liked her insta post recently 😳
She revealed pic.twitter.com/OZRs3tisSC
— RCB Xtra (@Rcb_Xtra) May 12, 2026
விராட் கோலி குறித்து பேசிய ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ், ”சிலர் விராட் கோலிக்கு எதிராகப் பேசி, அவர் சொல்லாத விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அப்போது, நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? அவர் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். பணத்திற்காக நான் ஏன் அவருக்கு எதிராகப் பேச வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினேன் என்றார்.
தனக்கு ஒரே இரவில் கிடைத்த புகழைக் கண்டு ஆச்சரியப்பட்டது குறித்து பேசிய லிஸ்லாஸ், “மக்கள் என்னை தொடர்ந்து அழைக்கத் தொடங்கியபோதுதான் எனக்கு அது தெரிய வந்தது. நான் எனது நோட்டிஃபிகேஷன்களைக் கூட பார்க்கவில்லை. நான் கூகிளில் தேடியபோது, என்னைப் பற்றிய செய்திகள் பக்கம் பக்கமாக வெளிவந்தன. அது எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. இந்தியாவில், மக்கள், ‘இந்த லிஸ்லாஸ் யார்?’ என்று கேட்டார்கள். ஜெர்மனியில், ‘விராட் கோலி யார்?’ என்று தலைப்புச் செய்திகள் வந்தன, ஏனென்றால் அங்கு கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் இல்லை,” என்றார்.
ALSO READ: விமர்சனங்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர் கோலி.. மஞ்ச்ரேகர் கருத்தால் பரபரப்பு!
கோலியால் கிடைத்த வாய்ப்பு:
தனது புகைப்படத்திற்கு கோலி போட்ட ஒரு லைக்கால் என் தொழில்முறை வாய்ப்புக்கும் வழிவகுத்தது. சமீபத்தில், ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ் ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான ஒரு போட்டியைத் தொகுத்து வழங்கினார். இதுகுறித்து பேசிய அவர், “அந்த வேலையை நான் மிகவும் விரும்பினேன். போட்டிக்குப் பிந்தைய நெறிப்படுத்தல், வீரர் நேர்காணல்கள் மற்றும் கோப்பை வழங்கும் விழாக்கள் போன்றவற்றை நான் செய்தேன். அந்த விளையாட்டின் ஒரு பகுதியாக இருந்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது,” என்று கூறினார்.
தொடர்ந்து, கவர்ச்சிகரமான பிராண்ட் விளம்பரச் சலுகைகளையும் தனக்குக் கிடைத்திருப்பதாக பேசிய லிஸ்லாஸ், “எனக்கு நிறைய பணம் வழங்க முன்வந்திருக்கிறார்கள், ஆனால் எனது கொள்கைகளுக்கு எதிரான எதையும் நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார்.