டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036 திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் விஜய் – வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.50 கோடி பரிசு
CM Vijay Launches Dream Olympics 2036 : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சியில் ‘DREAM OLYMPICS 2036 என்ற திட்டத்தை முதல்வர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.50 கோடி பரிசு வழங்கினார்.
சென்னை, அக்டோபர் 8 : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சியில் ‘DREAM OLYMPICS 2036 என்ற திட்டத்தை முதல்வர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி அக்டோபர் 8, 2026 அன்று நடைபெற்றது.
வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.50 கோடி பரிசு
இந்த விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் நிகழ்வில் முதல்வர் விஜய் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து டிரீம் ஒலிம்பிக்ஸ் 2026 என்ற திட்டத்தை துவங்கி வைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜ்க்கு ரூ.1 கோடி 55 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வருண பகவானை வளைக்க பிளான்.. இரு தவளைகளுக்கு கலகல திருமணம்.. கோவையில் கிராம மக்கள் வினோதம்!
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, இளைஞர் நலனுக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்து கொடுங்கள் என்று சொல்லும் முதல்வர் நம்மிடம் உள்ளார். 1994க்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த விளையாட்டு கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. ஜெ., தொடங்கியவற்றை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டனர். ஒலிம்பிக் மெடல் வேண்டுமென்றால், அதற்கு ஏற்ற ஈக்கோ சிஸ்டத்தை முதலில் உருவாக்க வேண்டும்.
கடந்த 100 வருசமாக, தமிழ்நாட்டில் இருந்து நாம் ஒலிம்பிக் மெடல் எடுக்கவில்லை. நம்முடை வீரர்கள் தேசிய அளவில் வெற்றி பெறுகிறார்கள். தேசிய விளையாட்டில் 6 அல்லது 7வது இடத்தில் இருக்கிறோம். சிரமப்பட்டு தான் காமன்வெல்த், ஆசியன் போட்டிக்கு போவார்கள். அங்கு போவதற்குள், காயங்களை சந்திக்க நேரிடும் என்றார்.
மேலும் பேசிய அவர், முதல்வருக்கு ஒரு கோரிக்கை, கல்லூரிகளிலும் பிடி பீரியட் கொண்டு வர வேண்டும். இன்றைய இளைஞர்கள் போதையில் இருக்க காரணம், அவர்களின் டிப்ரஷன், தனிமை தான் காரணம் என முதல்வருக்கு தெரியும். பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே மாதிரி ஒரு நாளுக்கு 45 நிமிடம் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால், உடலை பராமரிக்கும் கலாசாரத்தை கொண்டு வரலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : “40 நாட்கள் உழைப்பு வீண்?”.. விபிஜி ராம்ஜி திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாக பெண்கள் போராட்டம்.. அதிகாரிகள் மீது புகார்!
அதனைத் தொடர்ந்து பேசிய தடகள வீரர் விஷால் டி.கே, நானும் ஒரு SDAT மாணவன் தான். அரசு இதே போல வீரர்களுக்கு உதவி செய்துகொண்டே இருங்கள். நான் இருக்கும் போது விடுதியில் ஏசி அறை கிடையாது. நான் காயத்திலிருந்து மீளும் போது ஏசி இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒரு விளையாட்டு வீரராக ஏசி எவ்வளவு முக்கியம் என தெரியும். இந்த வசதி கிடைக்கும் பொழுது எங்கள் விளையாட்டை கொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.