5 மாநில தேர்தல் முடிந்த பிறகு… – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் கண்டனம்
CM Joseph Vijay : திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 அதிகரித்தது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை, மே 15 : திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை மே 15, 2026 அன்று ரூ. 3 அதிகரித்தது. பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்கத்தக்கதல்ல. கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் நிறுவனங்கள் விலையைக் குறைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் கண்டனம்
மேலும், இருசக்கர வாகனங்கள், கார்களைப் பயன்படுத்தும் மக்களின் மாத வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வங்கிக் கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்குவோர் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமையும் என அவர் தனது அரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : மகளிருக்கு ரூ. 2500 உதவித்தொகை.. கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..
முதல்வர் விஜய்யின் அறிக்கை
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை#CMJosephVijay pic.twitter.com/FZIcuTHdCQ
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 15, 2026
மேலும் அவர் தனது அறிக்கையில் இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும். மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும் என்றார்.
இதையும் படிக்க : ‘தொழில் புரட்சியை நோக்கித் தமிழகம்’.. தலைமைச் செயலகத்தில் முன்னணி சிஇஓ-க்களைச் சந்தித்த முதல்வர் விஜய்!
குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.