AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை.. உலக முதலீடுகளுடன் போட்டியிடும் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

CM MK Stalin: முதல்வர் ஸ்டாலின், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உடன் இணைந்து, அந்த வாகனத்தை உற்பத்தி வரிசையிலிருந்து இயக்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியைத் தாண்டி, தற்போது தமிழ்நாடு உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க “உலகத்துடன் போட்டியிடும்” நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை.. உலக முதலீடுகளுடன் போட்டியிடும் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Feb 2026 15:14 PM IST

பிப்ரவரி 9, 2026: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரூ.9,000 கோடி மதிப்பிலான கிரீன்‌ஃபீல்டு உற்பத்தி ஆலையை திங்கள்கிழமை திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டப்பட்டு வெறும் 16 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதலீட்டு உறுதிமொழிகளை செயல்படும் திட்டங்களாக மாற்றுவதில் தமிழ்நாடு அரசு காட்டி வரும் உறுதியை இது வெளிப்படுத்துகிறது.

ராணிப்பேட்டையில் திற்க்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை:

இந்த ஆலை, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகனப் பிரிவின் (TMPV) முதல் கட்டத் திட்டமாகும். இதில், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை வாகனங்கள், மின்சார வாகனங்கள் உட்பட, உற்பத்தி செய்யப்பட உள்ளன. இங்கிருந்து வெளியே வந்த முதல் வாகனம், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஈவோக் ஆகும்.

தமிழ்நாடு இனி உலகத்துடன் போட்டியிடும்:

முதல்வர் ஸ்டாலின், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உடன் இணைந்து, அந்த வாகனத்தை உற்பத்தி வரிசையிலிருந்து இயக்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியைத் தாண்டி, தற்போது தமிழ்நாடு உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க “உலகத்துடன் போட்டியிடும்” நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: எந்த ஊருடா… வட மாநில பணியாளர் மீது காவலர் தாக்குதல்… வைரலாகும் வீடியோ – அண்ணாமலை கண்டனம்

மேலும், ராணிப்பேட்டை ஆலை, குறுகிய காலத்திற்குள் முதலீட்டு உறுதிமொழிகளை செயல்படும் தொழிற்சாலைகளாக மாற்றும் தமிழ்நாட்டின் திறனை நிரூபிக்கும் சான்றாகும் என்றும் முதல்வர் கூறினார்.

ஏற்றுமதி சந்தைகளுக்கும் இது பங்களிக்கும்:

இந்தத் திட்டத்தின் மூலம், மின்சாரம், இரசாயனம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே வலுவான அடையாளம் கொண்டுள்ள டாடா குழுமத்தின் தமிழ்நாட்டிலான இருப்பு மேலும் வலுப்பெறுகிறது. இந்த ஆலை, ஜே.எல்.ஆர்., டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஈவி நிறுவனங்களுக்கான வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீர்-நன்மை (water-positive) செயல்முறைகள் போன்றவற்றுடன், நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட தொழிற்சாலையாக இது இயங்கும்.

வரும் 5 முதல் 7 ஆண்டுகளில், கட்டகட்டமாக உற்பத்தி அதிகரித்து, ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறனை இந்த ஆலை எட்டும். உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, ஏற்றுமதி சந்தைகளையும் இது சேவையளிக்கும் என என். சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த ஆலை, நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களையும், உள்ளூரில் பயிற்சி பெற்ற மனிதவளத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ‘லக்ஷ்யா’ (Lakshya) “படிக்கவும்–சம்பாதிக்கவும்” (earn-while-you-learn) திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் பட்டதாரிகள், ஜே.எல்.ஆர். பயிற்சி மையங்களில் தீவிர பயிற்சி பெறுகின்றனர். பணியில் இருக்கும் போதே, நிறுவன ஆதரவுடன் பொறியியல் பட்டம் பெறும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகனப் பிரிவு சுமார் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நேரடி மற்றும் மறைமுகமாக 5,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், துணை உற்பத்தித் துறை (ancillary manufacturing ecosystem) வளர்ச்சிக்கும் இது ஆதரவாக அமையும்.

Follow Us