பல ஆண்டு கால போராட்டத்துக்கு முடிவு…மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…முதல்வரின் பொங்கல் பரிசு!
old pension scheme re implementation: தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. அந்த அறிவிப்பு குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டோ ஜியோ, ஜாக்டோ ஜியோ ஆகிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மேற்கண்ட அமைப்பு தெரிவித்திருந்தது. இவர்களிடம் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான குழு தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர்கள் மீண்டும் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் இன்று (சனிக்கிழமை) முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
அதன்படி, முதல்வர் மு. க. ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவித்தார். அதன்படி, இதில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் 50 சதவீதத்தில் 10 சதவீதம் அவர்களின் பங்களிப்பாக இருக்கும்.
மேலும் படிக்க: “ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!




தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய திட்டமாக தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஓய்வூதியம் பெற்று வரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் உள்ள சிறப்புகள்
50 சதவீதம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அரசு ஊழியர்கள் தனது பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் விருப்ப ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை நெருங்கும் போதோ, பணிக் காலத்தின் போதோ உயிரிழக்க நேரிட்டால், அவர்களது பணி காலத்தின் அடிப்படையில் ரூ. 25 லட்சம் பணிக்குடையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் ஜனவரி 6- ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: நொடி பொழுதில் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில்.. வாட்ஸ்அப் செயலியில் நியாய சேது செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசு!