Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொடைக்கானலில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி! 

Kodaikanal Vehicle Entry Fees Hiked | கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் விதிக்கப்படும். இந்த நிலையில், அங்கு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி ஜனவரி 1, 2026 முதல் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி! 
கொடைக்கானல்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Jan 2026 07:43 AM IST

திண்டுக்கல், ஜனவரி 03 : தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ள கொடைக்கான்லுக்கு (Kodaikanal) ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக நாள்தோறும் ஏராளமான் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர். வார விடுமுறை, பண்டிகை காலங்களில் அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படும். அந்த வகையில் தற்போது தொடர் விடுமுறை உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றன்ர்.

கொடைக்கானலில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் அதிகரிப்பு

இவ்வாறு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு அங்குள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியின் (Silver Waterfall) அருகில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 01, 2026 முதல் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த வித முன் அறிவிப்பும் இன்றி இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க் : அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து – 2 வட மாநில தொழிலாளர்கள் பலி

எந்த எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

  • பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வேன்களுக்கான கட்டணம் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கார், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எம்ஜிஆர் பெயர், படம் நீக்கம்… திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

இவ்வாறு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.20 மற்றும் அதிகபட்சமாக ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிக்ள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.