தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற கருப்பையா – யார் இவர் ?
CM Joseph Vijay : புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக சட்டமன்றம் மே 11, 2026 நாளை கூடுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, மே 10 : சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக திரில்லர் படங்களை போல நிமிடத்துக்கு நிமிடம் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டது. விஜய் முதல்வராக பதவியேற்பாரா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதித்துக்கொண்டனர். குறிப்பாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கப்போவதாக வெளியான செய்திகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனையடுத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிக்க, ஆட்சியமைக்க தேவையான ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதனயைடுத்து ஆட்சியமைக்க உரிமைகோரி விஜய் ஆளுநரை சந்தித்தார்.
தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பையா
இதனையடுத்து விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் விஜய், இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். விஜய்க்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. இந்த நிலையில் வருகிற மே 13, 2026க்குள் சட்டமன்றத்தில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் கெடு விதித்துள்ளார்.




இதையும் படிக்க : “விஜய் மாமா”.. பதவியேற்ற மேடையிலேயே குழந்தைகளுக்கு நன்றி சொன்ன விஜய்!!
ஆளுநர் முன்னிலையில் சபாநாயகராக பொறுப்பேற்ற கருப்பையா
#WATCH | Chennai: TVK leader MV Karuppaiah takes oath as Pro Tem Speaker of the Tamil Nadu Assembly in the presence of Governor Rajendra Vishwanath Arlekar and Chief Minister C Joseph Vijay pic.twitter.com/ssXjxtwA7M
— ANI (@ANI) May 10, 2026
இதற்கிடையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக சட்டமன்றம் மே 11, 2026 நாளை கூடுகிறது. அப்போது சட்டமன்ற தேர்தலில் வென்ற வேட்பாளர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதையும் படிக்க : CM Vijay speech: நான் மன்னர் பரம்பரை அல்ல – அதிரடியாக பேசிய முதலமைச்சர் விஜய்!
யார் இந்த கருப்பையா?
முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறை சென்னை தலைமை செயலகம் வந்த முதல்வர் விஜய் தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனையடுத்து கருப்பையா இன்று மக்கள் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் புதிய சபாநாயகராக பதவியேற்கவிருக்கிறார். இதனையடுத்து அவர் மே 11, 2026 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைக்கவிருக்கிறார். கடந்த 2011 முதல் 16 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் கருப்பையா. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து சோழவந்தான் தனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.