AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Chief Minister Vijay : புது அரசு தொடக்கம்.. தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

Tamil Nadu Government Formation: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய் தனது வசம் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை ஆகிய முக்கியத் துறைகளை வைத்துள்ளார். அவரது அமைச்சரவையில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Tamil Nadu Chief Minister Vijay : புது அரசு தொடக்கம்.. தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
முதல்வர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 May 2026 10:24 AM IST

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் தவெக தலைவர் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கமே அதிர்ந்தது. இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். விழாவைக் காண சென்னை மாநகரம் முழுவதும் தொண்டர்கள் வெள்ளமெனத் திரண்டனர். தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக மாறியுள்ளது. சுமார் 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு மாற்றாக, ஒரு தனி மனிதன் தனது நிதானமான நகர்வுகளாலும், மக்களின் மீதான அக்கறையாலும் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறார்.

இதையும் படிக்க: CM Vijay Swearing-in Ceremony Live: முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.. அமைச்சர்கள் யார் யார்?

அமைச்சரவை மற்றும் துறைகள்:

விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய் தனது வசம் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை ஆகிய முக்கியத் துறைகளை வைத்துள்ளார். அவரது அமைச்சரவையில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவு 120ஆக உயர்வு:

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். முன்னதாக, தவெக தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்து, காங்கிரஸ், சிபிஎம் (CPM), சிபிஐ (CPI), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இன்று காலை 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கையெழுத்து:

முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், விஜய் கோட்டைக்குச் சென்று எந்த கோப்பில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளின்படி, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிர் உதவித்தொகை மாதம் ரூ.2,500, இலவசப் பேருந்து பயணம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் அவரது முதல் கையெழுத்து அமையும் என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் நடந்த மாற்றம்:

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில், ஒரு புதிய மாற்றுச் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் மற்றும் ‘ஜென்-சி’ (Gen-Z) வாக்காளர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், “மதச்சார்பற்ற சமூக நீதி” மற்றும் “நிர்வாகச் சீர்திருத்தம்” ஆகியவற்றைத் தனது அரசின் கொள்கைகளாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “விஜய் என்னும் ஆளுமை”.. இயக்கமாக தொடங்கி முதலமைச்சர் மகுடம் வரை.. ஒரு ரீவைண்ட்!

Follow Us