AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Video : சென்னை தலைமை செயகலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு – வைரலாகும் வீடியோ

Chief Minister Vijay Inspects Secretariat : சென்னை தலைமை செயலகத்தை பேட்டரி வாகனத்தில் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமை செயலக ஊழியர்களையும் அவர் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video : சென்னை தலைமை செயகலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு – வைரலாகும் வீடியோ
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 May 2026 17:12 PM IST

சென்னை, மே 22 : தமிழ்நாடு அமைச்சரவை மே 22, 2026 இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் முன்னிலையில் இருவருக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து முதல்வர் விஜய்யை விசிக தலைவர் திருமாளவன் சந்தித்தார்.

சென்னை தலைமை செயகலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தை பேட்டரி வாகனத்தில் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமை செயலக ஊழியர்களையும் அவர் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள பழமையான தேவாலயத்தையும் அவர் பார்வையிட்டார். இதனையடுத்து முதல்வர் விஜய்யை காண தலைமை செயலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்தார்.

இதையும் படிக்க : கோட்டையை ஆளும் தவெக கூட்டணி அரசு.. “அமைச்சர்கள் மற்றும் இலாகாக்கள்” முழு விவரம்!

வைரலாகும் முதல்வர் விஜய்யின் வீடியோ

 

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து முதன்முறையாக அவர் தலைமை செயலகத்தை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் முதல்வர் விஜய்யை எம்ஆர்எஃப் நிறுவனத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவருக்கு விராட் கோலி கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை பரிசளித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் தமிழக முதல்வர் விஜய் 2 நாட்கள் பயணமாக மே 23, 2026 அன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அமைச்சரான வன்னி அரசு, ஷாஜகான்.. வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.. திமுகவினருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!!

மேலும் தமிழக அரசின் சார்பில் ரூ.65 லட்சமம் நிதியுதவியுடன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 7 அடி உயர வள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தனது பயணத்தின் போது முதல்வர் விஜய் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையயும் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us