AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதமர் மோடி நிகழ்வில் நயினார் நாகேந்திரன்…. – அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம்

Minister Questions Nainar Nagendran’s Presence : சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1300 கோடி அளவிலான திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றது சர்ச்சையான நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நிகழ்வில் நயினார் நாகேந்திரன்…. – அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம்
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Oct 2026 21:13 PM IST

சென்னை, அக்டோபர் 11 : தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11, 2026 இன்று பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1300 கோடி அளவிலான திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலவர் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம்

அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டியல், எங்க நிர்வாகிகளைக் கூட அரசு பள்ளிகளுக்குப் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கோம். அப்படி இருக்கும்போது, மத்திய அரசு நிகழ்ச்சிகளில் அவங்க கட்சிக்காரங்களை உட்கார வைக்கிறது எந்த புரோட்டோகால்னு தெரியவில்லை. இது ஒரு தவறான முன்னுதாரணம். இதைத் தவிர்க்கணும். அவங்க கட்சிக்காரங்களைப் பிரபலப்படுத்த அரசு நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather report: நாளை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட விடியோ பதிவில் பிரதமருடைய திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றன. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட திருமங்கலம் கொல்லம் செல்கின்ற நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி முடிந்திருக்கிறது. அதில் ஒரு பகுதியை பிரதமர் இன்று திறந்து வைத்துள்ளார். அதில், முதல்வர் கலந்துகொண்டார். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னையும், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டார்கள்.

அதேபோல மத்திய நிதின் கட்கரி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இவ்வளவு பெரியத் திட்டத்தை திறந்து வைக்க அவர் கலந்துகொள்ளாதது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதேமாதிரி எந்தப் பொறுப்பிலும் இல்லாத, எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாகக் கூட இல்லாத அண்ணன் நயினார் நாகேந்திரன் எப்படி மேடையில் உட்கார்ந்தார். எந்த ப்ரோட்டோகாலின்படி என்று எனக்குத் தெரியவில்லை.

இதையும் படிக்க : தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு – திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேச்சு

பிரதமருடன் நயினார் நாகேந்திரன் எந்த ப்ரோட்டோகாலின்படி அமர வைக்கப்பட்டார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. இது மத்திய அரசின் நிகழ்ச்சி. இதற்கென சில ப்ரோட்டோகால் இருக்கின்றன. உள்ளூர் எம்எல்ஏகள், அமைச்சர்கள், உள்ளூர் எம்.பி.க்கள் இருக்கலாம் என்பதுதான் ப்ரோட்டோகால். ஆனால், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவரை எப்படி இன்று மேடையில் மோடி அமர வைத்தார். இது என்ன குறிப்பிடத்தக்க இப்படிப்பட்ட பழக்கங்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” எனப் பேசியுள்ளார்.

Follow Us