Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது..ஜாக்டோ ஜியோ விழாவில் முதல்வர் பேச்சு!

Chief Minister MK Stalin Speech: அரசு ஊழியர்களின் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருவதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் இவ்வாறு தெரிவித்தார் .

அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது..ஜாக்டோ ஜியோ விழாவில் முதல்வர் பேச்சு!
அரசு ஊழியர்களின் அரசாக செயல்படும் திமுக அரசு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Feb 2026 20:23 PM IST

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: திராவிட மாடல் அரசு ஊழியர்களுக்கான அரசாக இருப்பதே மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: தவெக கோட்டையாக கொங்கு மண்டலம் மாறும்…கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை!

  • அரசு அலுவலகத்தை பற்றிய ரகசிய குறிப்பேடு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி.
  • பணிக் காலத்தின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி.
  • ஈட்டிய விடுப்பை திரும்ப ஒப்படைத்து பணமாக பெரும் திட்டம்.
  • திருமண கடன், வாகன கடன், வீடு கட்ட கடன், மருத்துவ காப்பீடு திட்டம், 6 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசின் ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தப்படும் போது மாநில அரசு ஊழியர்களுக்கும் பஞ்சபடி உயர்த்துதல்.
  • பொங்கல் கருணைத் தொகை போனஸாக வழங்கப்பட்டது. ஒழிவு மறைவற்ற முறையில் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல்.
  • அரசு பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு.
  • 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் மற்றும் 7 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம்.
  • 2 லட்சம் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம். ஓய்வு காலப் பணிக்கொடை உச்ச வரம்பு உயர்வு.
  • தமிழ் ஆசிரியர் பணியிட பாகுபாடு நீக்கம். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.

ஆகிய பல்வேறு நன்மைகளை மறைந்த முன்னாள் முதல்வர் தலைமையிலான திமுக அரசு செய்து வருகிறது. அரசியலில் கொள்கை பிடிப்போடு செயல்பட்டு வரும் திமுக அரசு மக்களின் நலனுக்காக உருவாக்கப்படக்கூடிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரிய கடமையை அரசு ஊழியர்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களால் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலங்களில் 2-ஆவது மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.

அரசு திட்டங்களுக்கு கிடைத்த வரவேற்பில் ஊழியர்களுக்கு முக்கிய பங்கு

திமுக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததற்கு முக்கிய பங்கு வகிப்பது அரசு ஊழியர்கள் தான். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகவும், காலதாமதம் இன்றியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தேமுதிக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை…அமைச்சர் எ.வ.வேலு அளித்த புதிய விளக்கம்!