AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை: குடிநீர் ஏ.டி.எம். திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Chennai Launches 50 Drinking Water ATMs: சென்னையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் 50 குடிநீர் ஏடிஎம்-கள், 2025 ஜூன் 18 அன்று முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகின்றன. ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் UV தொழில்நுட்பத்தைக் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நீர், 150ml மற்றும் 1 லிட்டர் அளவுகளில் கிடைக்கும்.

சென்னை: குடிநீர் ஏ.டி.எம். திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
குடிநீர் ஏ.டி.எம். திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Jun 2025 07:15 AM IST

சென்னை ஜூன் 18: சென்னையில் (Chennai) முதன்முறையாக குடிநீர் ஏ.டி.எம். திட்டம் (Drinking water ATM project) தொடக்கம் காண உள்ளது. முதற்கட்டமாக 50 ஏ.டி.எம்.களை 2025 ஜூன் 18 இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) மெரினா கடற்கரையில் திறந்து வைக்கிறார். பஸ் நிலையம், பள்ளி, சந்தை பகுதிகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் இந்த ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏ.டி.எம்.யிலும் 150 மில்லி மற்றும் 1 லிட்டர் அளவுகளில் சுத்தமான குடிநீர் பெறலாம். ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ், புற ஊதாக் கதிர்கள் மூலம் தரமான நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. ரீசார்ஜ் வசதி, பேட்டரி இயக்கம், ஸ்மார்ட் கார்டு, குறுஞ்செய்தி அறிவிப்பு உள்ளிட்ட நவீன வசதிகளும் இதில் உள்ளன.

புதிய முயற்சியாக குடிநீர் ஏ.டி.எம். திட்டத்தை அறிமுகம்

பொதுமக்கள் சுத்தமான குடிநீர் பெறுவதற்காக சென்னை மாநகராட்சி புதிய முயற்சியாக குடிநீர் ஏ.டி.எம். திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இன்று (2025 ஜூன் 18) மெரினா கடற்கரையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட 50 குடிநீர் ஏ.டி.எம்.களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பொதுமக்கள் பாட்டில்களில் நீரை நிரப்பிக் கொள்ளலாம்

இந்த ஏ.டி.எம்.கள் கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைகள் போன்ற மக்கள் கூடும் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏ.டி.எம்.யிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரு அளவுகளில் நீர் பெற முடியும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பாட்டில்களில் நீரை நிரப்பிக் கொள்ளலாம்.

சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ATM

ஏ.டி.எம்.கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும்

சென்னையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் 50 குடிநீர் ஏடிஎம்-கள், ஜூன் 18 அன்று முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகின்றன. ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் UV தொழில்நுட்பத்தைக் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நீர், 150ml மற்றும் 1 லிட்டர் அளவுகளில் கிடைக்கும்.

பஸ் நிலையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இவை 24 மணி நேரமும் செயல்படும். ஸ்மார்ட் கார்டு மற்றும் ரீசார்ஜ் வசதிகளும் இதில் அடங்கும். அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ், புற ஊதாக் கதிர்கள் ஆகியவை மூலம் தேசிய தரமுள்ள நீரை வழங்குகின்றன.

50 பரிவர்த்தனைகளின் விவரங்களை பார்வையிடும் வசதியும் உள்ளது

நீரின்மை நேரங்களில் கடவுச்சொல் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி மற்றும் கடந்த 50 பரிவர்த்தனைகளின் விவரங்களை பார்வையிடும் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த அமைப்பில் ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்களால் கட்டண வசூல் செய்வதற்கான முறையும் அமையப்பட்டுள்ளது.

குடிநீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் குறித்த தகவல்கள் பயனர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனுக்குடன் தெரிவிக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow Us