AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை மக்களே கவனிங்க.. மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!

Chennai Emu Train Cancelled : பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 4 மணி நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மக்களே கவனிங்க.. மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!
மின்சார ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Jun 2025 11:18 AM IST

சென்னை, ஜூன் 14 : சென்னையில் மூன்று நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 14, 16,19ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பரமாரிப்பு பணிகள் நடைபெறுவதாக மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மக்கள் பிரதான போக்குவரத்து சேவையாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சார ரயில்கள் புறநகரை இணைக்கக் கூடியது என்பதால் மக்கள்  அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். தற்போது சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டு உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்க அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். பராமரிப்பு பணிகளின்போது சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக சிறப்பு ரயில்களும் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,  2025 ஜூன் 14, 16,19ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பரமாரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எந்தெந்த ரூட்ல?


இதனால், அவ்வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11:20 மணி முதல் பிற்பகல் 3:20 மணி வரை 4 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுதவாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காலை 10.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – கடற்கரை ரயில், மதியம் 1,2.30,3.15 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில்களும், மதியம் 1.15, 310, இரவு 9 மணிக்கு சூலூர்பேட்டை – சென்ட்டில் இடையே இயக்கப்படும் ரயிலும், மாலை 6.45 மணிக்கு நெல்லூர் – சூலூர்பேட்டை மெமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயிலும், காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டு கும்மிடிப்பூண்டி ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்த செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

Follow Us