Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் இந்தியாவின் முதல் 10 வழிச் சாலை – எப்போது திறப்பு?

Chennai's 10-Lane Highway: சென்னை புறவட்டச் சாலை, இந்தியாவின் முதல் 10-வழிச் சாலை, மகாபலிபுரம் முதல் காட்டுப்பள்ளி வரை 132.87 கி.மீ நீளத்தில் அமைக்கப்படுகிறது. 196 அடி அகலமுடைய இந்தச் சாலை, 6 பிரதான சாலைகள் மற்றும் 4 சர்வீஸ் சாலைகளைக் கொண்டுள்ளது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு, 2026 ஜனவரியில் திறக்கப்பட உள்ளது.

சென்னையில் இந்தியாவின் முதல் 10 வழிச் சாலை – எப்போது திறப்பு?
சென்னையில் இந்தியாவின் முதல் 10 வழிச் சாலைImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Jun 2025 10:02 AM

சென்னை ஜூன் 14: சென்னை புறவட்ட சாலை (Peripheral Road) இந்தியாவின் முதலாவது 10 வழிச் சாலையாக (India’s first 10-lane highway) உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரம் முதல் காட்டுப்பள்ளி வரை (From Mahabalipuram to Kattupalli)  132.87 கி.மீ நீளத்தில், 196 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதில் 6 பிரதான சாலைகள், 4 சர்வீஸ் சாலைகள் உள்ளன. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வாகனங்கள் ஓடக்கூடியதாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு சர்வீஸ் சாலையில் அனுமதி இல்லை. சிசிடிவி கேமராக்கள், வானிலை அறிவிப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்படும். 12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த சாலை 2026 ஜனவரியில் திறக்கப்படும்.

சென்னையில் இந்தியாவின் முதன்மை 10 வழிச் சாலை

சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் மிகப்பெரிய சாலை திட்டமாக, சென்னை புறவட்ட சாலை (Chennai Peripheral Road) இந்தியாவின் முதலாவது 10 வழிச் எக்ஸ்பிரஸ்வேயாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலை 132.87 கிலோமீட்டர் நீளமுடையதாக அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையின் மேற்பார்வையில் நடைபெறும் இத்திட்டம், அகலமான எக்ஸ்பிரஸ்வேயாக இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்கவிருக்கிறது.

மகாபலிபுரம் முதல் காட்டுப்பள்ளி வரை

மகாபலிபுரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை விரிவடையும் இந்த சாலை சமீபத்தில் “சென்னை பார்டர் சாலை” என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் அகலம் 196 அடி அளவிலுள்ளது. இதில் போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில் 6 பிரதான வழித்தடங்கள் மற்றும் இரு பக்கங்களிலும் தலா 2 என 4 சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

இந்தியாவின் முதல் 10 வழிச் சாலை

வரும் ஜனவரியில் திறக்க திட்டம்!

முன்னதாக 2025 டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடியும் என திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, 2026 ஜனவரி மாதம் இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் இரு கட்டங்களாக செயல்படுகிறது, மொத்தமாக ரூ.12,301 கோடி செலவில் நடைமுறையில் உள்ளது.

அதிரடி வசதிகள்

இந்த 10 வழிச் சாலையில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வாகனங்கள் பயணிக்க முடியும். சர்வீஸ் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. மேலும்தேசிய அளவில் முன்னோடியான தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகும்; சிசிடிவி கேமராக்கள், வாகன ஓட்டிகளுக்கான வானிலை தகவல் வசதிகள், போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் போன்றவை அமையவுள்ளன.

நிதி யார் வழங்குகிறார்கள்?

இந்த பத்து வழி சாலை திட்டத்தின் முதற்கட்ட நிதியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி நிறுவனங்கள் 2-வது, 3-வது கட்டங்களுக்கு நிதி வழங்கியுள்ளன.