AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும்? வெளியான அறிவிப்பு

TNPSC Exam Update : கடந்த பிப்ரவரி 8, 2026 அன்று ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் வரும் மார்ச் 15-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதற்கான அறிவிப்புகளை கவனித்து, தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும்? வெளியான அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Feb 2026 19:06 PM IST

சென்னை, பிப்ரவரி 9 : கடந்த பிப்ரவரி 8, 2026 அன்று ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் வரும் மார்ச் 15-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதற்கான அறிவிப்புகளை கவனித்து, தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 2 பிரிவில் தொழில்துறையின் உதவி ஆய்வாளர், இளம் வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 82 பணியிடங்கள், குரூப் 2ஏ பிரிவில் வணிகவரி உதவியாளர் உள்ளிட்ட 1,309 பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான ஆரம்பத் தேர்வு கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற்றது. இதில், சுமார் 4.20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில், 10,583 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.

இந்த நிலையில் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு பிப்ரவரி 8, 2026 அன்று காலை நடைபெறுவதாகவும், குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தமிழ் தகுதி தேர்வு பிப்ரவரி 8, 2026 அன்று மாலை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை வைஷ்ணவா கல்லூரி தேர்வு மையத்துக்கு வந்த தேர்வர்கள் தங்களின் பதிவு எண்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : சென்னை – குருவாயூர் ரயிலில் திடீர் புகை? சந்தேகத்தால் அபாய சங்கிலியை இழுத்த பயணி…அடுத்த நடந்த ட்விஸ்ட்!

குரூப் 2ஏ தேர்வு மீண்டும் எப்போது நடைபெறும்?

 

அதே நேரம் ஸ்டேட் காலேஜில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 821 பதிவு எண்கள் பட்டியிலடப்பட்டிருந்தாலும், 10க்கும் குறைவான தேர்வகர்களே வருகை தந்ததாக தகவல் வெளியானது. இதில் தேர்தல் தேர்வுகள் தொடர்பாக குளறுபடி நிலவியது தெளிவானது. இந்த நிலையில் குரூப் 2ஏ முதன்மை தேர்வையும் மாலை நடைபெறவிருந்த தமிழ் தகுதி தேர்வையும் ரத்து செய்தது. பல்வேறு கனவுகளுடன் தேர்வு எழுதுவந்த போட்டி தேர்வகர்களிடையே இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீது தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : ஒரே நாளில் 8 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்…47 பேர் பணியிட மாற்றம்…கள்ளக்குறிச்சியில் அதிரடி நடவடிக்கை!

இந்த நிலையில் தேர்வு மைய முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக வெங்கட் பிரியா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,  டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மட்டும் மார்ச் 15, 2026 அன்று மீண்டும் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 22, 2026 அன்று நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Follow Us