தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு விவகாரம்…கொடூர சம்பவத்தில் மறைந்திருக்கும் மக்களின் சோக கதை!
Namakkal Kidney Theft Incident: நாமக்கல் மாவட்டத்தில் வறுமையை காரணமாக வைத்து நெசவு தொழில் செய்யும் பொது மக்களிடம் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்றிருந்தது. தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் அந்த மக்களின் சோகமான வாழ்க்கை கதை மறைந்துள்ளது. அதனை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் நெசவு தொழில் செய்து வரும் பொது மக்களிடம் வறுமையை காரணம் காட்டி கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்த கொடூர சம்பவத்துக்கு பின்னால், கிட்னியே இழந்தவர்களின் சோக கதை மறைந்துள்ளது. அவற்றை சற்று விரிவாக பார்க்கலாம். கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், எனது கணவர் மது பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இதனால், குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால், அதற்கான வட்டி மற்றும் அசலை செலுத்த முடியாத காரணத்தால் எங்களது கிட்னியை அவர்களிடம் விற்பனை செய்து விட்டோம். இதே போல, மூதாட்டி ஒருவர் கூறுகையில், எனது ஊரில் மட்டும் சுமார் 50 பேர் வாங்கிய கடனுக்காக தங்களது கிட்னியை விற்பனை செய்துள்ளனர். இவை அனைத்துமே கடன் பிரச்சினையால் ஏற்பட்டுள்ளதாகும். நான் கிட்னியை விற்பனை செய்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றேன்.
வாங்கிய கடனை அடைப்பதற்காக கிட்னியை விற்றேன்
அதில், எனது மகனுக்கு மருத்துவ செலவுக்காக ரூ.25 செலவு செய்துள்ளேன். மீதம் இருக்கும் தொகையை வட்டியாக செலுத்தி வருகிறேன். மேலும், எனது உழைப்புக்கு கிடைக்கும் வருவாயை வட்டியாக கட்டி வருகிறேன் என்று அந்த மூதாட்டி தெரிவித்தார். மேலும், கிட்னியை இழந்த ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், நான் முன்னதாக மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வார சம்பளம் ரூ.300 முதல் ரூ.400 வரை இருக்கும். எனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனை திருப்பி செலுத்தும் படி, கடன் அளித்தவர்கள் தொல்லை அளித்து வந்தனர்.
மேலும் படிக்க: சாலையில் கிடந்த 20 பவுன் நகை..நேர்மை தவறாமல் தூய்மை பணியாளர் செய்த செயல்..திருவாரூரில் நெகிழ்ச்சி!




நாமக்கல் மாவட்டத்தில் நெசவு தொழில் நலிந்து விட்டது
இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம். குடும்பத்தை நடத்துவதற்கான வருமானம் குறைவாக இருந்தால் அதிகளவு துயரத்தில் இருந்து வந்தோம். இதன் காரணமாக எனது கிட்டியை விற்பனை செய்து அதில் வந்த பணத்தில் மூலம் கடனை அடைத்தேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக கைத்தறி நெசவாளர் சங்கத்தைச் சேர்ந்த பி.கந்தவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு நூற்பாலைகள், டையிங் பட்டறைகள், கார்மெண்ட்ஸ் ஆகியவை இழுத்து மூடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு வேலை இழப்பும், வருமானம் குறைவும் ஏற்பட்டுள்ளது.
வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே வேலை
நெசவு செய்யும் ஆலைகளில் ஆர்டர்கள் இல்லாத காரணத்தினால் ஒரு வாரம் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனால், வேலைக்கு வரும் ஊழியர்களின் வருமானம் குறைகிறது. இதன் காரணமாக, அவர்கள் கடன் வாங்கிய இடத்தில் அதற்கான வட்டி மற்றும் அசலை செலுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன் இது போன்ற சம்பவங்களும் நிகழ்கிறது என்று தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு ரூ.1,500 சம்பளம் வாங்கி வந்த இடத்தில், ரூ.500 மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்பதால் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்.
கிட்னி விற்பனை குறித்து பெண் கூறியது
என்னிடம் கிட்னி கொடுத்தால் எனது குழந்தைகளை கடைசி வரைக்கும் படிக்க வைப்பதாக கூறினர். அதன்படி, கோவை ஏஎம்சிஹெச் இல் எனக்கு அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டர். இதை தொடர்ந்து, என்னை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று மீண்டும் பரிசோதனை மேற்கொண்டு என்னிடமிருந்து கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். கடந்த நவம்பர் மாதம் என்னை சிங்கப்பூர் கூட்டி சென்று ஜனவரி மாதம் தான் ஊருக்கு திரும்ப அனுப்பி வைத்தனர். தற்போது, மேலும் மேலும் கடன் வாங்கி ரூ.30 லட்சம் வரை கடன் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சென்னை-குருவாயூர் ரயிலில் திடீர் புகை? சந்தேகத்தால் அபாய சங்கிலியை இழுத்த பயணி…அடுத்த நடந்த ட்விஸ்ட்!