Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய 2 குழந்தைகள் பலி.. நீடிக்கும் பரபரப்பு!!

vaccination at hospital: அப்போது, நள்ளிரவில் குழந்தை மதுஷாவிற்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய 2 குழந்தைகள் பலி.. நீடிக்கும் பரபரப்பு!!
தடுப்பூசி செலுத்திய மேலும் ஒரு குழந்தை பலி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Feb 2026 07:35 AM IST

திருச்சி, பிப்ரவரி 08: திருச்சி மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், புத்தாநதம் அருகே உள்ள கொன்னம்பட்டியில் சிவக்குமார் (32). இவரது 5 மாத ஆண் குழந்தைக்கு குளத்துப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டு காய்ச்சல் அடித்தது.

மேலும் படிக்க: அதிகாலையில் கொட்டும் பனி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை அப்டேட் இதோ!!

தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு:

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் குழந்தையை உடனடியாக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அங்கிருந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மணப்பாறை அரசு மருத்துமவனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை:

இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பார்த்து கதறி துடித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மனதை கனக்க செய்தது. இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புத்தாநதம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை தடுப்பூசி செலுத்தியதால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த சம்பவம்:

இதேபோல், கடந்த 2ம் தேதி அரசு சின்னியம்பாளையம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளியான சுரேஷ் (32) என்பவரது மனைவிக்கு பிறந்து 50 நாட்களான குழந்தை மதுஷாவுக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பின்னர் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சி ஸ்ரீரங்கம் தசாவதார சன்னதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

அப்போது, நள்ளிரவில் குழந்தை மதுஷாவிற்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் அதிர்ச்சி:

தமிழகத்தில் ஒரே வாரத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.