Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. சென்னையில் இன்று நடக்கும் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்..

BJP High Level Meet: சென்னையில் இன்று பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்குகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த உயர்மட்ட குழு கூட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. சென்னையில் இன்று நடக்கும் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Dec 2025 06:15 AM IST

சென்னை, டிசம்பர் 16, 2025: சென்னையில் இருக்கக்கூடிய நட்சத்திர ஹோட்டலில் இன்று பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவைப் பொறுத்தவரையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களை கைப்பற்றியது. இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுகவிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 20 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதனை தற்போது இரட்டிப்பாக கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பயணிகள் கவனத்திற்கு…. இந்த புத்தாண்டு முதல் பயணிகள் ரயிலில் வரும் மாற்றம் – என்ன தெரியுமா?

தேர்தலுக்கு தயாராகும் பாஜக:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதே சமயத்தில், டிசம்பர் 15 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது வரக்கூடிய தேர்தலை சந்திப்பதற்கான சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது பாஜக தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: அரசியலில் கம்முனு இருக்க கூடாது… மக்கள் எப்படி ஆட்சியைத் தருவாங்க… – விஜய்யை விமர்சித்த அண்ணாமலை

இன்று நடக்கும் பாஜக உயர்மட்டகுழு கூட்டம்:

இந்தச் சூழலில், சென்னையில் இன்று பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்குகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த உயர்மட்ட குழு கூட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும், தொகுதி வாரியாக நிலவரம் எப்படி இருக்கிறது,

பாஜக எந்தெந்த தொகுதிகளில் வலுவாக இருக்கிறது, கடந்த முறை எந்த தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றது, பலவீனமான பகுதிகளில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.