பயணிகள் கவனத்திற்கு…. இந்த புத்தாண்டு முதல் பயணிகள் ரயிலில் வரும் மாற்றம் – என்ன தெரியுமா?
Indian Railways : வருகிற ஜனவரி 1, 2026 முதல் திருநெல்வேலி பயணிகள் ரயிலில் மிகப்பெரிய மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனையடுத்து டிக்கெட் புக் செய்யும் முன் பயணிகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறும் அறிிப்பு வெளியாகியுள்ளது. அதகுறித்து விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலியை (Tirunelveli) மையமாகக் கொண்டு இயங்கும் பயணிகள் ரயிலின் (Train) எண்கள் வருகிற ஜனவரி 1, 2026 புத்தாண்டு முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகளிடையே குழப்பம் ஏற்படக் கூடாது என்பதால் எந்தெந்த ரயில்களுக்கு என்ன எண்கள் மாற்றப்படவிருக்கின்றன என்பது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது அடிக்கடி ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஏதுவாக இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வருகிறத ஜனவரி 1, 2026 புத்தாண்டு அன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் எண்களில் நடைமுறைக்கு வரும் மாற்றம்
ரயில்களின் எண்களை இந்திய ரயில்வே அடிக்கடி மாற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில்கள் மற்றும் திருநெல்விலேயில் இருந்து திருச்செந்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்லும் ரயில்கலின் எண்கள் என மொத்தம் 18 ரயில்களின் எண்கள் வருகிற ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!




அதன் படி ஜனவரி 1, 2026 முதல் தற்போது 56727 என்ற எண் கொண்ட திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் செல்லும் ரயிலுக்கு 56751 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. அதே போல 56729 என்ற எண்ணில் இயங்கி வரும் திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் பயணிகள் ரயில் வரும் ஜனவரி 1 முதல் 56753 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 57631 என்ற எண் கொண்ட வாஞ்சிமணியாச்சி முதல் திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலுக்கு 56755 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் 56733 என்ற புதிய எண் கொண்ட புதிய ரயிலுக்கு 56757 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் 56728 என்ற எண்ணில் இயங்கும் ரயிலுக்கு 56752 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி சொல்லு் 56732 என்ற எண் கொண்ட ரயிலுக்கு 56756 வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி என்ற எண்ணில் இயங்கும் ரயிலுக்கு 56754 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயிலுக்கு 56758 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருச்சி டூ சென்னைக்கு ஏர்பஸ் விமான சேவை…எப்போது இயக்கம் தெரியுமா!
திருச்செந்தூர் முதல் வாஞ்சிமணியாச்சி என்கிற எண்ணில் இயங்கும் ரயிலுக்கு புதிய எண் 56760 வழங்கப்பட்டுள்ளது. மதுரை முதல் செங்கோட்டை வரை இயங்கும் ரயிலுக்கு 56771 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டை முதல் மதுரை 56720 என்ற ரயிலுக்கு 56772 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி செங்கோட்டைக்கு 56736 என்ற எண்ணில் இயங்கும் ரயலிக்கு 56773 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ரயில் எண்கள் மாற்றத்தை கவனத்தில் கொண்டு வரும் ஜனவரி 1, 2026 அன்று முதல் புதிய எண்களைக் கவனத்தில் கொண்டு பயண சீட்டுகளை பதிவு செய்யுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.